Times of Puducherry

அர்னாப் புயலால் வெள்ளத்தில் மூழ்கிய சாவித்திரி நகரைப் பார்வையிட்ட அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ்

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
28 Oct 2026 • 12:40 PM
malladi-inspected-flood-affected-areas-savithri-nagar-yanam

அர்னாப் புயலின் தீவிர தாக்கத்தால் சாவித்திரி நகருக்குள் கடல் நீர் புகுந்து, கிராமம் முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியது. பலத்த காற்று மற்றும் கனமழை காரணமாக வழியெங்கும் மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சாய்ந்து, போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்நிலையிலும், மக்களின் நிலைமையை நேரில் அறிந்து அவர்களுக்கு நம்பிக்கையளிக்கும் நோக்கில், புதுச்சேரி அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் வழியில் ஏற்பட்ட தடைகளைக் கடந்து, ஆந்திரப் பிரதேசம் வழியாக தாளரேவு மற்றும் காடிமொகா கிராமங்களைக் கடந்து சாவித்திரி நகரைச் சென்றடைந்தார்.

அர்னாப் புயலால் வெள்ளத்தில் மூழ்கிய சாவித்திரி நகரைப் பார்வையிட்ட அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ்

வெள்ளத்தில் மூழ்கிய சாவித்திரி நகரைப் பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார். நிவாரண முகாம்களில் தங்கியிருந்த மக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, அவர்களை முதல் தளத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுத்ததுடன், பொதுமக்கள் அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தினார்.

அர்னாப் புயலால் வெள்ளத்தில் மூழ்கிய சாவித்திரி நகரைப் பார்வையிட்ட அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ்

புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் அரசு வழங்கும் என்றும் உறுதியளித்தார். அமைச்சருடன் ஏனாம் பிராந்திய நிர்வாக அதிகாரி சிவராஜ் மீனா உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

அர்னாப் புயலால் வெள்ளத்தில் மூழ்கிய சாவித்திரி நகரைப் பார்வையிட்ட அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ்

அதிகம் படித்தவை

  • October 28, 2026 • 12:49 PM

அர்னாப் புயல் பாதிப்புகளைத் தொடர்ந்து உடனடி நிவாரணப் பணிகளை மேற்கொண்ட அமைச்சர் மல்லாடி

  • October 28, 2026 • 12:40 PM

அர்னாப் புயலால் வெள்ளத்தில் மூழ்கிய சாவித்திரி நகரைப் பார்வையிட்ட அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ்

  • October 28, 2026 • 12:31 PM

மத்திய அரசின் பி.எம்.கிசான் நிதியுதவி பயனாளிகள் மத்திய விவசாயிகள் பதிவேட்டில் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்

  • October 28, 2026 • 11:53 AM

அழிவின் விளிம்பில் உள்ள தமிழ் காமிக்ஸ் துறை:அரசின் முயற்சியோடு காப்பாற்றப்பட வேண்டும்

  • October 28, 2026 • 11:42 AM

முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் கைது: த.வெ.க. அரசைக் கண்டித்து திருச்சியில் திமுகவினர் ஆர்ப்பாட்டம்!

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top