Times of Puducherry

திருச்சியில் 18 ஆண்டு கால சொத்துப் பிரச்சினை: அண்ணனைக் வெட்டிக்கொன்ற தம்பிக்கு ஆயுள் தண்டனை

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
28 Oct 2026 • 11:21 AM
life-imprisonment-for-younger-brother-who-murdered-his-own-sibling

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே, 18 ஆண்டு கால சொத்துத் தகராறில் அண்ணனைக் கொடூரமாக வெட்டிக்கொன்ற தம்பிக்கு ஆயுள் தண்டனை மற்றும் அபராதம் விதித்து திருச்சி முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

திருச்சி துறையூர் அடுத்த பெருமாள்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது57). இவருக்கும் இவருடைய தம்பி சந்திரசேகர் (வயது50) என்பவருக்கும் இடையே கடந்த 18 ஆண்டுகளுக்கும் மேலாக சொத்துத் தகராறு இருந்து வந்துள்ளது. இந்த நிலையில், கடந்த 11.03.2024 அன்று கிருஷ்ணமூர்த்தி சிக்கத்தம்பூர் பகுதியிலிருந்து தனது வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தப்போது அங்கு வந்த சந்திரசேகர், தனது அண்ணன் கிருஷ்ணமூர்த்தியிடம் மீண்டும் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

திருச்சியில் 18 ஆண்டு கால சொத்துப் பிரச்சினை: அண்ணனைக் வெட்டிக்கொன்ற தம்பிக்கு ஆயுள் தண்டனை

அப்போது வாக்குவாதம் முற்றிய நிலையில், தான் மறைத்து வைத்திருந்த அருவாளால் கிருஷ்ணமூர்த்தியின் தலை மற்றும் உடலின் பல்வேறு பகுதிகளில் சந்திரசேகர் கொடூரமாக வெட்டியுள்ளார். இதில் படுகாயமடைந்த கிருஷ்ணமூர்த்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து உயிரிழந்த கிருஷ்ணமூர்த்தியின் மனைவி கலைச்செல்வி (வயது41) துறையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இப்புகாரின் பேரில், கொலை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து எதிரி சந்திரசேகரைக் கைது செய்தனர்.
இந்த வழக்கின் விசாரணை திருச்சி முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் (PDJ) முழுமையாக நிறைவடைந்த நிலையில், நீதிபதி கிறிஸ்டோபர் தீர்ப்பளித்தார். அண்ணனைக் கொலை செய்த குற்றத்திற்காக தம்பி சந்திரசேகருக்கு ஆயுள் தண்டனையும், ரூபாய் 5,500 அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

அதிகம் படித்தவை

  • October 28, 2026 • 12:49 PM

அர்னாப் புயல் பாதிப்புகளைத் தொடர்ந்து உடனடி நிவாரணப் பணிகளை மேற்கொண்ட அமைச்சர் மல்லாடி

  • October 28, 2026 • 12:40 PM

அர்னாப் புயலால் வெள்ளத்தில் மூழ்கிய சாவித்திரி நகரைப் பார்வையிட்ட அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ்

  • October 28, 2026 • 12:31 PM

மத்திய அரசின் பி.எம்.கிசான் நிதியுதவி பயனாளிகள் மத்திய விவசாயிகள் பதிவேட்டில் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்

  • October 28, 2026 • 11:53 AM

அழிவின் விளிம்பில் உள்ள தமிழ் காமிக்ஸ் துறை:அரசின் முயற்சியோடு காப்பாற்றப்பட வேண்டும்

  • October 28, 2026 • 11:42 AM

முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் கைது: த.வெ.க. அரசைக் கண்டித்து திருச்சியில் திமுகவினர் ஆர்ப்பாட்டம்!

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top