Times of Puducherry
மத்திய அரசின் பி.எம்.கிசான் நிதியுதவி பயனாளிகள் மத்திய விவசாயிகள் பதிவேட்டில் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என புதுச்சேரி வேளாண்மை அறிவித்துள்ளது இது குறித்து வேளாண்மை துறை இயக்குனர் ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்:
மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் அமைச்சகம் கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இருந்து பி.எம்.கிசான் என்றழைக்கப்படும்விவசாயிகள் கௌரவ நிதிததிட்டத்தினை அமுல் படுத்தி வருவது அனைவரும் அறிந்ததே. இத்திட்டத்தில், மத்திய அரசின் வழிக்காட்டுதல்களின் படி, தகுதியுள்ள விவசாயிகள் பதிவு செய்யப்பட்டு நான்கு மாதங்களுக்கு ஒரு முறை, விவசாயத்தில் ஏற்படும் சாகுபடி செலவினங்களை ஈடுகட்ட உதவிட, ரூபாய் இரண்டாயிரம் வழங்கப்பட்டு வருகின்றது.
மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சகத்தின் வழக்காட்டுதல்களின் படி, இனி, பி.எம்.கிசான் திட்ட பயனாளிகள், மத்திய விவசாயிகள் பதிவேட்டில் தம்மை பதிவு செய்துக்கொண்டு தனித்துவ அடையாள எண் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்த மத்திய விவசாயிகள் பதிவேட்டில், சம்மந்தப்பட்ட பி.எம்.கிசான் விவசாயிகளின் ஆதார் எண், ஆதார் இணையத்தளத்தில் சரிபார்க்கப்பட்டு அதன் பின் அவர்கள் தங்கள் பெயரில் நிலப்பட்டா வைத்திருக்கும் பட்சத்தில், புதுச்சேரி நில அளவை மற்றும் பதிவேடுகள் துறையின், பட்டா விபரங்கள் அடங்கிய நிலமகள் இணையத்தளத்தில் அவர்களின் பட்டா விபரங்கள் சரிபார்க்கப்பட்டு பின்னர் மத்திய விவசாயிகள் பதிவேட்டில் தனித்துவ அடையாள எண் வழங்கப்படும்.
பட்டா இல்லாத பி.எம்.கிசான் பயனாளிகளுக்கு அவர்களின் ஆதார் எண் மட்டும் ஆதார் இணையத்தளத்தில் சரிபார்க்கப்பட்டுபின்னர் பட்டா வழங்கப்படும் போது அவர்களின் நில விபரங்கள் மத்திய விவசாயிகள் பதிவேட்டில் இணைக்கப்பட்டு பின்னர் அடையாள எண்வழங்கப்படும்.
எனவே, பி.எம்.கிசான் பயனாளிகள் அனைவரும் அவர்களின் ஆதார் மற்றும் பட்டா நகல்களுடன் அவர்களின் உழவர் உதவியகத்தினைஉடனடியாக அனுகுமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
பட்டா இல்லாத பி.எம்.கிசான் பயனாளிகள் ஆதார் நகல் மட்டும் கொண்டு வரவும். இருவகை பயனாளிகளும் ஆதார் எண்ணில் இணைக்கப்பட்ட கைபேசியினை கண்டிப்பாக எடுத்து வர வேண்டும்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.