Times of Puducherry

முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் கைது: த.வெ.க. அரசைக் கண்டித்து திருச்சியில் திமுகவினர் ஆர்ப்பாட்டம்!

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
28 Oct 2026 • 11:42 AM
dmk-members-protest-against-tvk-govt-for-arrest-of-anbil-mahesh

தமிழக முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சரும், திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளருமான அன்பில் மகேஷ் கொய்யாமொழி பள்ளிக்கல்வித்துறையில் சுமார் நூறு கோடிக்கு மேல் ஊழல் செய்ததாக கூறி தவெக அரசு கைது செய்து புழல் சிறையில் அடைத்தது.
இதனை கண்டித்து திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் ஆயில்மில் பகுதியில் உள்ள கலைஞரின் உருவ சிலை முன்பு திமுக முன்னாள் எம்எல்ஏ சேகரன் தலைமையில் தவெக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தற்போதைய த.வெ.க. அரசின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளைக் கண்டித்தும், த.வெ.க. அரசு அரசியல் ஆதாயத்திற்காக எதிர்க்கட்சியினர் மீது பொய் வழக்குகள் போடுவதை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற திமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் முழக்கங்களை எழுப்பினார்கள்.

வன்முறையைத் தூண்டும் விதமாகச் செயல்படுவதையும், அடக்குமுறைகளை ஏவிவிடுவதையும் அரசு கைவிட வேண்டும், பொய் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியை எவ்வித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினார்கள்.

முன்னாள் அமைச்சரின் கைதைக் கண்டித்து ஒருங்கிணைக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் பகுதி செயலாளர்கள் நீலமேகம் , சிவகுமார், தர்மராஜ், ஏ எம் ஜி விஜயகுமார், திருவெறும் பூர் ஒன்றிய செயலாளர்கள் கே எஸ் எம் கருணாநிதி, கங்காதரன், கூத்தைப்பார் பேரூராட்சி தலைவர் செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அதிகம் படித்தவை

  • October 28, 2026 • 12:49 PM

அர்னாப் புயல் பாதிப்புகளைத் தொடர்ந்து உடனடி நிவாரணப் பணிகளை மேற்கொண்ட அமைச்சர் மல்லாடி

  • October 28, 2026 • 12:40 PM

அர்னாப் புயலால் வெள்ளத்தில் மூழ்கிய சாவித்திரி நகரைப் பார்வையிட்ட அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ்

  • October 28, 2026 • 12:31 PM

மத்திய அரசின் பி.எம்.கிசான் நிதியுதவி பயனாளிகள் மத்திய விவசாயிகள் பதிவேட்டில் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்

  • October 28, 2026 • 11:53 AM

அழிவின் விளிம்பில் உள்ள தமிழ் காமிக்ஸ் துறை:அரசின் முயற்சியோடு காப்பாற்றப்பட வேண்டும்

  • October 28, 2026 • 11:42 AM

முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் கைது: த.வெ.க. அரசைக் கண்டித்து திருச்சியில் திமுகவினர் ஆர்ப்பாட்டம்!

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top