Times of Puducherry
அர்னாப் புயலின் தாக்கத்தால் வீசிய பலத்த காற்று மற்றும் கனமழை காரணமாக ஏனாமில் பல இடங்களில் மரங்களும் மின்கம்பங்களும் சாய்ந்தன. இதனால் முக்கிய சாலைகளில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, அதிகாலை முதல் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் , மீட்புப் பணியாளர்களுடன் இணைந்து சாலைகளில் விழுந்த மரங்களை அகற்றி, போக்குவரத்தைச் சீரமைக்கும் பணிகளை நேரில் இருந்து கண்காணித்து வருகிறார்.
ஏனாமில் உள்ள கும்மலவாரி வீதி பகுதியில் பெரிய ஆலமரம் வேரோடு சாய்ந்து கட்டிடங்களின் மீது விழுந்ததால் அவை சேதமடைந்தன. அந்தப் பகுதியையும் அமைச்சர் நேரில் பார்வையிட்டார்.
புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உதவிகளை அரசு சார்பில் வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்குவதுடன், ஏனாம் முதியோர் இல்லம் மூலமாகவும் உணவு விநியோகம் செய்யத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.