Times of Puducherry
புதுவையில் அனைத்து தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் இன்று (வெள்ளிக் கிழமை) நடக்கிறது.புதுவை மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
இந்திய தேர்தல் ஆணையத் தின் அறிவுறுத்தலின்படி, வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணியின் போது விடுபட்ட தகுதியான வாக்காளர்களை கண்டறிந்து, அவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட உள்ளது. இதேபோல் 18 வயது பூர்த்தியடைந்த புதிய வாக்காளர்களை சேர்ப்பதற்காக புதுச்சேரி மாவட்டத்தில் உள்ள தட்டாஞ்சாவடி சட்ட மன்றத் தொகுதி நீங்கலாக அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் இன்று சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
இதில் 18 வயது பூர்த்தியடைந்த புதிய வாக்காளர்கள் மற்றும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணியின் போது தங்களது பெயர் விடுபட்டுள்ளதாக கருதும் நபர்களும் சிறப்புமுகாமை பயன்படுத்திக் கொள்ளலாம். வாக்காளர் பட்டியலில் தகுதியான எந்தவொரு வாக்காளரின் பெயரும் விடுபடாத வகையில் தேர்தல் நிர்வாக்ம் தேவையான நடவ டிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. எனவே, பொதுமக்கள் இந்த சிறப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறு மாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
பொதுமக்கள் தங்களது , குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் சுற்றுவட்டாரத்தில் வசிக்கும் தகுதியான நபர்களுக்கும் சிறப்பு முகாம் குறித்த தகவலைத் தெரிவிக்க வேண்டும். மேலும் அவர்கள் அனைவரும் முகாமை பயன்படுத்திக் கொள்ள தேவையான ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
இதே போல் காரைக்காலில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் இந்த சிறப்பு முகாம் இன்று நடைபெறும். இதனை பொதுமக்கள் பயன் படுத்திக்கொள்ள வேண்டும் என்று தேர்தல்துறை அறிவுறுத்தியுள்ளது.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.