Times of Puducherry
புதுச்சேரி, மதுராந்தகம், மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகள் இன்று அக்டோபர் 9, வெள்ளிக்கிழமையன்று அறிவிக்கப்படும். வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு, இதற்கென ஒதுக்கப்பட்ட வாக்கு எண்ணும் மையங்களில் தொடங்கும்.
புதுச்சேரி, தட்டான்சாவடி, மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்கள் அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெற்றன.
வாக்கு எண்ணிக்கையில் முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும்; அதனைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் (EVMs) பதிவான வாக்குகள் எண்ணப்படும். வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்த பின்னரும், தேர்தல் நடத்தும் அலுவலரின் சான்றளிப்புக்குப் பின்னரும் ஒவ்வொரு தொகுதிக்குமான இறுதி முடிவுகள் அறிவிக்கப்படும்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம் தொகுதி பட்டியல் சாதியினருக்காகவும் (எஸ்.சி), திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரம் தொகுதி பழங்குடியினருக்காகவும் (எஸ்.டி) ஒதுக்கப்பட்ட சட்டமன்றத் தொகுதிகளாகும். மதுராந்தகம் இடைத்தேர்தலில் மொத்தம் 27 வேட்பாளர்களும், தாராபுரத்தில் 22 வேட்பாளர்களும் போட்டியிட்டனர்.
வாக்குப்பதிவு முடிந்த பிறகு வெளியான புள்ளிவிவரங்களின்படி, மதுராந்தகத்தில் சுமார் 86.26 சதவீதமும், தாராபுரத்தில் சுமார் 80.30 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன.
தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் 80.81 சதவீத வாக்குகள் பதிவாகின. வாக்குகள் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு வேட்பாளர்களின் முகவர்கள் முன்பு சீல் வைத்த தேர்தல் நடத்தும் அதிகாரிகள் பலத்த போலீசார் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையமான மோதிலால் நேரு அரசு பாலிடெக்னிக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.
புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் அசோக் ஆனந்த், திமுக சார்பில் சேது செல்வம், காங்கிரஸ் சார்பில் விநாயகம், இந்திய கம்யூனிஸ்டு கட்சி சலீம், நாம் தமிழ் கட்சி கார்த்திகா குமாரி உள்ளிட்ட 11 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
இந்த தேர்தலில் ஆண் வாக்காளர்கள் 12,575, பெண் வாக்காளர்கள் 14,341, மூன்றாம் பாலினத்தவர் 5 பேர் என மொத்தம் 26,921 பேர் வாக்களித்தனர்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மோதிலால் நேரு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் 24 மணி நேரமும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
வாக்காளர்கள் 2026-ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு இடைத்தேர்தல் முடிவுகளை, இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் இணையதளம் ஆகியவற்றின் மூலம் ஆன்லைனில் தெரிந்துகொள்ளலாம்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.