Times of Puducherry
ஏனாம் தொகுதியின் வளர்ச்சிப் பணிகளின் ஒரு பகுதியாக, திராட்சாராமம் சாலையில் உள்ள மீன் வளத்துறை அலுவலகம் முதல் டாக்ஸி நிலையம் வரை கான்கிரீட் சென்டர் மீடியன் அமைக்கும் பணிக்கு பொதுப்பணித்துறை மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டினார்.
ரூ.57.39 லட்சம் மதிப்பீட்டில் இப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இந்நிகழ்ச்சியில் ஏனாம் பிராந்திய நிர்வாகி சிவராஜ் மீனா, பொதுப்பணித்துறை உதவிப் பொறியாளர்கள் தமிழ்ச்செல்வம், பொட்டு பிரசாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.