Times of Puducherry
புதுவை மாநிலம், வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறையானது விவசாயிகள் நலம் சார்ந்த பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. முக்கியமாக பயிர் உற்பத்தி தொழில்நுட்ப திட்டத்தின் கீழ் நெல் பயிர் சாகுபடி செய்யும் அனைத்து விவசாயிகளுக்கும் பயிர் உற்பத்தி ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
தற்போது நெல் சாகுபடி செய்யும் பொதுப்பிரிவு விவசாயிகளுக்கு பயிர் உற்பத்தி ஊக்க தொகையாக ஒரு ஏக்கருக்கு ரூ-6000/-மாகவும் அட்டவணை பிரிவு விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ-7000/- மாகவும் உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, காரைக்கால் மாவட்டத்தில் கடந்த 2025-2026 ஆண்டில் சம்பா, தாளடி மற்றும் கரும்பு சாகுபடி செய்த 1077 பொதுப்பிரிவு விவசாயிகளுக்கு ரூ-1,46,93,870/-( ரூபாய் ஒரு கோடியே நாற்பது ஆறு லட்சத்து தொண்ணூற்று மூவாயிரத்து எண்ணூற்று எழுபது மட்டும்), 143 அட்டவணை பிரிவு விவசாயிகளுக்கு ரூ-13,52,400/-ம் (ரூபாய் பதிமூன்று லட்சத்து ஐம்பத்தி இரண்டாயிரத்து நாணூறு மட்டும்) ஆக மொத்தம் ரூ-1,60,46,270/- (ரூபாய் ஒரு கோடியே அறுபது லட்சத்து நாற்பத்தி ஆறாயிரத்து இருநூற்று எழுபது மட்டும்) வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு, இத்தொகைக்கான காசோலையை புதுவை அரசு மாண்புமிகு முதலமைச்சர் திரு.N.ரங்கசாமி அவர்கள் தலைமையில், மாண்புமிகு வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு.G.N.S.ராஜசேகரன் அவர்கள் முன்னிலையில், காரைக்கால் மாவட்ட விவசாய பெருமக்களுக்கு வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு குடிமைப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. சிவகொழுந்து அவர்கள், புதுவை அரசு வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை செயலர் திரு.A.S.P.S. ரவி பிரகாஷ்,J.A.S, வேளாண்துறை இயக்குனர் திரு.S. ஜெயசங்கர் அவர்கள், காரைக்கால் கூடுதல் வேளாண் இயக்குனர் திரு.R.கணேசன் அவர்கள் மற்றும் காரைக்கால் மாவட்ட விவசாய பெருமக்கள் கலந்துக்கொண்டனர்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.