Times of Puducherry

பெரம்பலூர் வெள்ளாற்றில் சிக்கி தவித்த தொழிலாளிகள் 9 பேர் பத்திரமாக மீட்பு

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
25 Oct 2026 • 2:21 PM
9-worker-trapped-and-struggling-in-vellar-river-flood-rescued

பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் நீர் நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. சில இடங்களில் ஓடைகளில் உடைப்பு ஏற்பட்டு வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது.

பாதிக்கப்பட்ட இடங்களை வருவாய் துறையினர் மற்றும் வருவாய் அலுவலர் ஆகியோர் நேரில் பார்வையிட்டு, வெள்ளப்பெருக்கு அதிகம் உள்ள இடங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி எச்சரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில் நேற்று இரவு பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர், குன்னம், வேப்பந்தட்டை, ஆலத்தூர் வட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் வேப்பந்தட்டை வட்டம் கல்லாறு மற்றும் குன்னம் வட்டத்தில் உள்ள வெள்ளாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதற்கிடையில், குன்னம் வட்டம் லப்பைக்குடிக்காடு அருகே உள்ள தொழுதூர் அணையின் அருகே ஆற்றுப் பகுதியில் பொருட்காட்சி பொருட்களை எடுப்பதற்காக 9 பேர் குழுவினர் வந்திருந்தனர். இரவு நேரம் என்பதால் அவர்கள் வெள்ளாற்று கரையோரம் தங்கினர். அதிகாலை 5 மணியளவில் தொழுதூர் அணையில் இருந்து 30 ஆயிரம் கன அடி நீர் திறந்துவிடப்பட்டதால், வெள்ளாற்றில் அணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதில் சிக்கிக் கொண்ட 9 பேரும் தங்களை மீட்கும்படி வேப்பூர் தீயணைப்புத்துறை வீரர்களுக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த சந்திரமோகன், தியாகராஜன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், கயிறு மூலம் 9 பேரையும் பத்திரமாக மீட்டனர். விசாரணையில் மீட்கப்பட்ட 9 பேரும் சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.

கடந்த 20 நாட்களாக லப்பைக்குடிக்காட்டில் உள்ள வெள்ளாற்றின் அருகே ராட்டினம் உள்பட பல்வேறு பொருட்காட்சிகள் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top