Times of Puducherry

திருச்சி கிழக்கு தொகுதியில் இரட்டை இலை மலரும்:அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
25 Oct 2026 • 11:10 AM
admk-will-win-east-trichy-rp.udaiyakumar

திருச்சி மாவட்டம் மற்றும் மாவட்ட அதிமுக ஜெயலலிதா பேரவை சார்பில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ஜெயலலிதா பேரவை மாநில செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் மாநில அமைப்பு செயலாளர் ரத்னவேல், திருச்சி மாவட்ட செயலாளர்கள் மனோகரன், கார்த்திகேயன், யோகநாதன், டிஎன் சிவக்குமார், மகளிரணி இணைச் செயலாளர் லீமா ரோஸ் மார்டின் எம்எல்ஏ ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்.

நிர்வாகிகள் மத்தியில் ஜெயலலிதா பேரவை மாநில செயலாளரும், முன்னாள் அமைச்சர்ருமான ஆர்.பி. உதயகுமார் பேசியதாவது:

அடுத்த கட்சிக்கு அகதிகளாக சென்றவர்களுக்கு அங்கு மரியாதை கிடையாது. தமிழகத்தில் பேரிகார்டு ஆட்சி தான் நடக்கிறது. உள்ளாட்சித் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற முடியாது என்பதால் தான் ஆறு மாதம் தேர்தலை தள்ளி வைத்துள்ளனர்.

திருச்சி கிழக்கு தொகுதியில் இரட்டை இலை மலரும், அதிமுகவிற்கு வெற்றி, தோல்வி ஒன்றும் புதிது அல்ல. தொண்டர்கள், பொதுமக்கள் ஆகியோர் இணைந்து எடப்பாடியை மீண்டும் ஆட்சியில் அமர வைக்க வேண்டும் என்றார்.

கூட்டத்தில் மாநில நிர்வாகிகள், ஜெயலலிதா பேரவை நிர்வாகிகள், திருச்சி மாநகர், புறநகர் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top