Times of Puducherry

அசோக் ஆனந்த் தொகுதி முழுவதும் நேரில் ஆய்வு செய்து துரித நடவடிக்கை

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
25 Oct 2026 • 3:17 PM
ashok-anand-active-in-proactive-measures-in-his-constituency

தட்டாஞ்சாவடி தொகுதி முழுவதும் மழைநீர் தேங்காமல் இருக்க எம்.எல்.ஏ. அசோக் ஆனந்த் அதிகாரிகளுக்கு உத்தரவு

தட்டாஞ்சாவடி தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்குவதைத் தடுக்கவும், பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் பாதுகாக்கவும், தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் அசோக் ஆனந்த் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

அசோக் ஆனந்த் தொகுதி முழுவதும் நேரில் ஆய்வு செய்து துரித நடவடிக்கை

தட்டாஞ்சாவடி தொகுதியில் பெய்து வரும் மழையைக் கருத்தில் கொண்டு, மழைநீர் குடியிருப்புப் பகுதிகளில் தேங்காமல் சீராக வெளியேறுவதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இதனைத் தொடர்ந்து, வாய்க்கால்களில் உள்ள அடைப்புகளை அகற்றுதல், மழைநீர் வடிகால்களைச் சீரமைத்தல், வாய்க்கால்களில் தேங்கியுள்ள கழிவுகளை அகற்றுதல் உள்ளிட்ட பணிகளை விரைந்து மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மேலும், தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளுக்கு நேரில் சென்று மழைநீர் வடிகால் வசதிகள் மற்றும் வாய்க்கால்களின் நிலை குறித்து எம்.எல்.ஏ. அசோக் ஆனந்த் ஆய்வு மேற்கொண்டார். மழைநீர் தடையின்றி வெளியேறுவதற்குத் தேவையான பணிகளைத் தாமதமின்றி முடிக்க வேண்டும் என்றும், பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

அவரது துரித நடவடிக்கைகளின் மூலம், மழைநீர் தேங்குவதால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தவிர்க்கும் வகையில் முன்னெச்சரிக்கைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

தொகுதி மக்களின் நலனுக்கு முன்னுரிமை அளித்து, மழைக்காலங்களில் ஏற்படும் சிரமங்களைக் குறைக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் தேவையான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என எம்.எல்.ஏ. அசோக் ஆனந்த் தெரிவித்தார்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top