Times of Puducherry

சீர்காழி அருகே மனைவி, மகன் அடித்து கொலை; கணவன் தூக்கிட்டு தற்கொலை

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
24 Oct 2026 • 4:30 PM
wife-son-murdered-by-beating-and-commits-suicide

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருமுல்லைவாசல் மீனவ கிராமம் காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ஜலேந்திரன் மீனவர். இவர் மனைவி மலர்செல்வி, மகன் அதிகுணன் ஆகியோருடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார்.

குடும்ப பிரச்சினை காரணமாக கணவன் மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று காலை வெகு நேரமாகியும் ஜலேந்திரன் வீடு திறக்கப்படாததால் அருகில் இருந்தவர்கள் ஜலேந்திரன் வீட்டிற்கு சென்று ஜன்னல் வழியே பார்த்தபோது வீட்டின் உள்ளே மலர்ச்செல்வி அதிகுணன் இருவரும் வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தது தெரியவந்தது.

சீர்காழி அருகே மனைவி, மகன் அடித்து கொலை; கணவன் தூக்கிட்டு தற்கொலை

தொடர்ந்து வீட்டின் அருகே மரத்தில் ஜலேந்திரன் தூக்கில் தொங்கியபடி இறந்து இருந்ததை கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

சீர்காழி அருகே மனைவி, மகன் அடித்து கொலை; கணவன் தூக்கிட்டு தற்கொலை

அதன்பின்னர் கிராம மக்கள் கொடுத்த தகவலின் பேரில் சீர்காழி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தூக்கில் தொங்கிய நிலையில் இருந்த ஜலேந்திரன் மற்றும் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த அவரது மனைவி, மகன் சடலத்தை மீட்ட சீர்காழி காவல்துறையினர், மூவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சீர்காழி போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் குடும்ப பிரச்சினை காரணமாக ஜவேந்திரன் அவரது மனைவி, மகனை இரும்பு தடியால் அடித்து கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மேலும் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட இரும்பு தடியை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தகவல் அறிந்த மயிலாடுதுறை மாவட்ட எஸ்பி. சினேகா பிரியா நேரில் விசாரணை மேற்கொண்டார். சீர்காழி அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top