Times of Puducherry

1,200 ஆண்டுகள் பழமையான பல்லவர் கால கொற்றவை சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
24 Oct 2026 • 3:55 PM
1200-years-old-kuttravai-statue-found-near-dam-sankuttuvan-reported

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த கீழ் அருங்குணம் கிராமத்தில் உள்ள ஏரியில் 1,200 ஆண்டுகள் பழமையான பல்லவர் கால கொற்றவை சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விழுப்புரம் வரலாற்று ஆய்வாளர் கோ.செங்குட்டுவன் கூறுகையில்:

கீழ்அருங்குணம் கிராம ஏரிக்குள் மண்ணில் கிடத்தப்பட்ட நிலையில் கொற்றவை சிற்பம் காணப்படுகிறது. சுமார் 6 அடி உயரமுள்ள
பலகைக் கல்லில் இந்தச் சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக 8 கரங்களுடன் காணப்படும் கொற்றவை இங்கு 4 கரங்களுடன் காட்சியளிக்கிறார். கொற்றவையின் முன் வலக்கரம் அபய முத்திரையுடனும், இடது கரம் தொடை மீது வைத்தும் காணப்படுகிறது.
பின்னிரு கரங்களில் சங்கு சக்கரம் ஏந்தி இருக்கிறார். மார்பு கச்சு மற்றும் இடையாடை அணிந்தும், அணிகலன்களுடனும் சிறிய இடையுடனும் காணப்படும் கொற்றவை, தனது இரு கால்களையும் எருமைத்தலை மீது நேராக வைத்து கம்பீரமாக நிற்கிறார். அவரதுகால்களுக்கு அருகாமையில் இருபுறமும் தலைப்பலி வீரன் மற்றும் பூஜை செய்யும் அடியவர் அமர்ந்துள்ளனர்.

கொற்றவையை பாய்கலைப் பாலை என வர்ணிக்கிறது சிலப்பதிகாரம். பாய்ந்தோடும் மானை வாகனமாகக் கொண்டவள் என்பது இதற்குப்பொருளாகும். கீழ்அருங்குணம் சிற்பத்தில் கொற்றவை வாகனமான மான் அவரது பின்னணியில் நின்றிருக்கிறது. நீண்ட கொம்புகளுடன் மிகவும் அழகாக வடிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த கீழ் அருங்குணம் கிராமத்தில் உள்ள ஏரியில் 1,200 ஆண்டுகள் பழமையான பல்லவர் கால கொற்றவை சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top