Times of Puducherry

காமராஜர் மணிமண்டபத்தில் அஞ்சுமன் நூற்றாண்டு நூலக அறிவு திருவிழா நடைபெற்றது

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
24 Oct 2026 • 5:06 PM
anjuman-centenary-book-and-knowledge-festival-held-inn-kamarajar-manimandapam

தமிழகத்தில் 2029 நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு சினிமா நட்சத்திரங்களை கொண்டு கட்சி தொடங்க வைத்து மாநில கட்சிகளை பலவீனப்படுத்தி வாக்குகளை சிதறடிக்கும் சதி திட்டத்தில் பாஜக ஈடுபட்டு வருவதாக விழுப்புரம் நாடாளுமன்ற எம்பி ரவிக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.

புதுச்சேரி காமராஜர் மணிமண்டபத்தில் நடைபெற்ற அஞ்சுமன் நூற்றாண்டு நூலக அறிவு திருவிழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் செய்தியாளர்களை பேசியதாவது:

காமராஜர் மணிமண்டபத்தில் அஞ்சுமன் நூற்றாண்டு நூலக அறிவு திருவிழா நடைபெற்றது

வாக்காளர் சிறப்பு திருத்தப்பட்டியலில் விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் ஒரு லட்சத்து 82,000 வாக்காளர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள், வானூர் சட்டமன்ற தொகுதியில் 25 ஆயிரம் வாக்காளர்கள் நீக்கப்பட்டு இருக்கிறார்கள், அதேபோன்று கோட்டகுப்பம் நகராட்சியிலும் அதிக அளவில் வாக்காளர்கள் நீக்கப்பட்டு இருக்கிறார்கள், எனவே சிறப்பு முகாம் நடத்தி நீக்கப்பட்டவர்களை மீண்டும் வாக்காளர் பட்டியலில் இணைக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி அனைத்து கட்சி கூட்டத்தில் வெளிநடப்பு செய்ததாக தெரிவித்த அவர், ஆசிரியரின் சாதிய பாகுபாடு காரணமாக மாணவன் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார் என்பது கண்டிக்கத்தக்கது, பள்ளிகளில் சாதிய பாகுபாடு கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது. எனவே திமுக ஆட்சி காலத்தில் சாதிய பாகுபாடுகளை தடுப்பதற்கு நீதிபதி சந்துரு தலைமையிலே ஆணையம் அமைக்கப்பட்டு அவர் அறிக்கையை சமர்ப்பித்தார் அதன் மீது ஒரு சில நடவடிக்கைகளை மட்டுமே திமுக அரசு எடுத்தது மற்றவற்றை எடுக்கவில்லை.

எனவே அறிக்கையில் உள்ள மற்ற பரிந்துரைகளை தவெக அரசு நடைமுறைப்படுத்தினால் சாதிய பாகுபாடுகளை களைய முடியும். அதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

செஞ்சியிலே மாணவி காணாமல் போனது காவல்துறை தன்னால் ஆன அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது, மிக அதிக அளவில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள், ஆனாலும் அவர்களை கண்டறிய முடிய வில்லை, காணாமல் போன சிறுமியை கண்டறிய பெற்றோர்களின் ஒத்துழைப்பு அவசியம் என்றும் வலியுறுத்தினார்.

தமிழ்நாட்டில் குழந்தைகள் காணாமல் போவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது, குழந்தைகள் குறி வைத்து கடத்தப்படுகிறார்கள், இதனை கண்காணிக்க காவல்துறையில் தனி பிரிவை ஏற்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்ட ரவிக்குமார், குழந்தைகள் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.

கூடுதலாக காவலர்கள் நியமிக்கப்பட்டு குற்ற செயல்களை தடுக்கப்பட வேண்டும் என கேட்டுக் கொண்ட அவர்,திரைப்பட நட்சத்திரங்களை பயன்படுத்தி ஆங்காங்கே மாநில அளவிலே இருக்கிற கட்சிகளை பலவீனப்படுத்துவது வாக்குகளை சிதறடிப்பது போன்ற யுக்திகளை பிஜேபி கையாளுகிறது.

தமிழ்நாட்டில் 2029 ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் குறி வைத்து, தமிழகத்திலும் இது போன்ற வேலைகளை ஆரம்பிக்கிறார்கள்,  வடமாநிலங்களில் பாஜக மிகப்பெரிய செல்வாக்கு சரிவை சந்தித்துக் கொண்டிருக்கிறது தென் மாநிலங்களில் ஓரளவுக்கு வாக்கு விகிதங்களை பெற்று சமாளிக்க முடியுமா என்ற முயற்சியில் பிஜேபியினர் ஈடுபட்டு வருகிறார்கள் என்று குற்றம் சாட்டினார்.

தவெக பின்னால் பாரதிய ஜனதா கட்சி உள்ளதா, என்ற கேள்விக்கு…

தவெக மதசார்பற்ற நிலைபாட்டை உருவாக்கி உள்ளது மைனாரிட்டி அரசாங்கத்தை சுத்திக்கொண்டிருக்கின்ற நேரத்திலேயும், பிஜேபி கொள்கைகளை எதிர்ப்பதில் இருக்கிறார் உறுதியாகத்தான் இருக்கிறார்கள் என்றும் தெரிவித்த அவர் பாஜக சொல்லி விஜய் கட்சி ஆரம்பித்தார் என்று சொல்ல முடியாது, ஆனால் பல நிகழ்வுகளை பாஜக செய்கிறது என்றும் தெரிவித்தார்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top