Times of Puducherry
புதுச்சேரி சுற்றுலா வளர்ச்சிக் கழக ஊதியர்கள் சம்பள உயர்வு கேட்டு இயக்குனர் அலுவலகத்தின் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்
புதுச்சேரி சுற்றுலா வளர்ச்சி கழகத்தில் சுமார் 80க்கும் மேற்பட்ட ஊழியர்கள் 18 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகின்றனர், கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக சம்பள உயர்வு கேட்டு ஊழியர்கள் போராடிவரும் நிலையில் இதுவரை நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த நிலையில் புதுச்சேரி சுற்றுலா வளர்ச்சி கழகத்தில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஊதிய உயர்வு மற்றும் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இயக்குனர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து ஊழியர்கள் கூறும்போது ஊழியர்களின் கோரிக்கையை நிர்வாகம் தீர்க்கவில்லை என்றால் தொடர் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் தெரிவித்தனர்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.