Times of Puducherry

வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தத்தினை (Special Summary Revision SSR) மேற்கொள்ள உத்தரவு

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
24 Oct 2026 • 12:15 PM
ssr-explaining-legal-terms-laws-and-procedures-by-raviprakash

புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலுள்ள அனைத்து சட்டமன்றத் தொகுதிகளுக்கும் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தத்தினை (Special Summary Revision SSR) மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது.

இதன் அடிப்படையில் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தத்தினை குறித்த முன்னேற்பாடுகள் பற்றி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளினுடன் தலைமை தேர்தல் அதிகாரி ASPS. ரவிப்பிரகாஷ், தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினார்.

வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தத்தினை (Special Summary Revision SSR) மேற்கொள்ள உத்தரவு

இந்தக் கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட ஆறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தின்போது, தலைமைத் தேர்தல் அதிகாரி அவர்கள், சிறப்புச் சுருக்கமுறைத் திருத்தப் பணிகள் தொடர்பான முக்கிய சட்ட விதிகள் மற்றும் நடைமுறைகள் குறித்து விளக்கமளித்தார். குறிப்பாக, இந்தியத் தேர்தல் ஆணையத்தால் அண்மையில் வெளியிடப்பட்ட அறிவுறுத்தல்கள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.

மேலும், திருத்தப்பணிகளைச் சுமுகமாக மேற்கொள்வதற்கு அனைத்துத் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொண்டார். அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் எழுப்பிய கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு தலைமை தேர்தல் அதிகாரி பதில் அளித்தார். இந்த ஆலோசனை கூட்டத்தில், துணை தலைமை தேர்தல் அதிகாரிகள் பா. தில்லைவெல் மற்றும் கந்தசாமி
ஆகியோரும் கலந்துகொண்டனர்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top