Times of Puducherry

வேப்பூர் அருகே ஐவதுகுடி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம்

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
24 Oct 2026 • 3:27 PM
school-management-committee-held-ivadhukudi-govt-school

கடலூர் மாவட்டம், வேப்பூர் அடுத்துள்ள ஐவதுகுடி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் 2026–2028 ஆம் ஆண்டிற்கான பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டம், பள்ளியின் தலைமை ஆசிரியர் கொளஞ்சிநாதன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பள்ளியின் கல்வி வளர்ச்சி, மாணவர்களின் நலன் மற்றும் பள்ளியின் மேம்பாட்டுப் பணிகளில் மேலாண்மைக் குழுவின் பங்கு குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, புதிய பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவராக மகேஸ்வரி மாரிமுத்து ஏகமனதாகத் தேர்வு செய்யப்பட்டார். மேலும், துணைத் தலைவர் மற்றும் குழு உறுப்பினர்களும் ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

வேப்பூர் அருகே ஐவதுகுடி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம்

புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பள்ளியின் கல்வித் தரத்தை மேம்படுத்தவும், மாணவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை உறுதிப்படுத்தவும், பள்ளியின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்குப் பெற்றோர் மற்றும் சமூகத்தின் பங்களிப்பை வலுப்படுத்தவும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top