Times of Puducherry
அக்டோபர் 4, 2026 மாலை சனி பகவானும், சூரிய பகவானும் நேர் எதிர் திசையில் சந்திக்கின்றனர். இது பிரதியுதி நிலை என அழைக்கப்படுகிறது. இதனால் சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கவுள்ளது.
சனி – சூரியன் பிரதியுதி நிலை
ஜோதிட சாஸ்திரத்தில் சனி பகவான் நீதிமானாகவும், மிக மெதுவாக நகரும் கிரகமாகவும் கருதப்படுகிறார். தற்போது சனிபகவான் மீன ராசியில் வக்ர நிலையில் சஞ்சரிக்கிறார். இந்நிலையில், அக்டோபர் 04 அன்று மாலை 5:56 மணிக்கு, சூரியனும் சனியும் ராசி மண்டலத்தில் ஒன்றுக்கொன்று நேர் எதிரெதிரே அமரும் ‘பிரதியுதி’ என்ற அரிய கிரக நிலை நிகழ்கிறது. இந்த அமைப்பினால் சிறப்பான யோகத்தையும் அதிர்ஷ்டத்தையும் பெறவுள்ள 3 ராசிகள் பற்றி இங்கு காணலாம்.
சிம்மம்
சிம்ம ராசியின் 8-ஆம் வீட்டில் சனி பகவான் வக்ர கதியிலும், சூரியன் 2-ஆம் வீட்டிலும் அமைந்துள்ளனர். இதன் காரணமாக சிம்ம ராசியினர் இதுவரை சந்தித்து வந்த பிரச்சனைகள் படிப்படியாகக் குறையும். பணியிடத்தில் அங்கீகாரமும், புதிய வாய்ப்புகளும் உண்டாகும். பொருளாதார முன்னேற்றம் கிடைக்கும். வியாபாரிகளுக்கு எதிர்பாராத பெரிய லாபம் கிட்டும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும். கடின உழைப்புக்கேற்ற பலன் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவர். கடன் அடைந்து செல்வம் சேரும்.
கன்னி
கன்னி ராசியில் சனி 7-ஆம் வீட்டிலும், சூரியன் 1-ஆம் வீட்டிலும் ஆதிக்கம் செலுத்துகின்றனர். எனவே கன்னி ராசியினருக்கு குடும்பம் மற்றும் உறவுகளில் நிலவி வந்த நீண்ட நாள் சிக்கல்கள் அகலும். மூதாதையர் சொத்துக்கள் கைக்கு வந்து சேரும். கடன் பிரச்சனைகள் தீரும். தொட்ட காரியங்கள் மற்றும் திட்டமிட்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். பொருளாதார நிலை வலுப்பெற்று, சேமிப்பும் அதிகரிக்கும். நீண்டகால இலட்சியங்களை நிறைவேற்ற இந்த காலகட்டம் மிகவும் சாதகமாக அமையும்.
தனுசு
இந்த கிரக மாற்றம் தனுசு ராசிக்கார்களுக்கு எதிர்மறைச் சூழல்களிலிருந்து விடுதலையைத் தரும். அனைத்து முயற்சிகளிலும் அதிர்ஷ்டம் துணையாக இருந்து பெரும் வெற்றியைத் தரும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், வாழ்க்கைத்துணையுடன் தரமான நேரத்தைச் செலவிடும் சூழலும் நிலவும். பணியிடத்தில் உழைப்புக்கு ஏற்ற பலன்கள், சம்பள உயர்வு மற்றும் போனஸ் கிடைக்க வாய்ப்புள்ளது. புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு எங்கள் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.