Times of Puducherry
இந்திய தேர்தல் ஆணையத்தின் தன்னிச்சையான ‘சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தத்தால்’ (SIR) நாடு முழுவதும் 13 கோடி வாக்காளர்களும், நமது புதுச்சேரியில் மட்டும் 1 லட்சம் வாக்காளர்களும் தங்களது வாக்கு உரிமையை இழந்துள்ளனர். ஜனநாயகத்தின் அடிப்படை உரிமையை நெரிக்கும் இந்தச் செயலைக் கண்டித்து அக்டோபர் 23 அன்று ஆளுநர் மாளிகை நோக்கி தேசியக்கொடி ஏந்தி பேரணி நடத்தப்படும் என புதுச்சேரி மக்கள் மேடை அமைப்பு அறிவித்துள்ளதது.
புதுச்சேரி ரெட்டியார்பாளையம் அஜித் நகரில் நல்லசிவம் நினைவு அரங்கில் நடந்த கூட்டத்தில் “அகில இந்திய SIR-க்கு எதிரான மக்கள் மேடை, புதுச்சேரி” அமைப்பு சார்பில், பல்வேறு சிவில் சமூக அமைப்புகள், மக்கள் இயக்கங்கள் மற்றும் ஜனநாயக சக்திகள் இணைந்து இந்தத் தொடர் போராட்டத்தை முன்னெடுக்கின்றன. பேரணி ராஜா திரையரங்கம் அருகில், புறப்பட்டு ஆளுநர் மாளிகை நோக்கி… முடிவடைகிறது.
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவியிலிருந்து நீக்கி, சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
SIR அடிப்படையில் தயாரிக்கப்பட்ட வாக்காளர் பட்டியல்களைப் பயன்படுத்தி இனி தேர்தல்கள் நடத்துவதை உடனே நிறுத்த வேண்டும்.
2024-க்கு முந்தைய வாக்காளர் பட்டியலை அடிப்படையாகக் கொண்டு, வெளிப்படையான பொதுத் தணிக்கைக்குப் பின்னர் வாக்காளர் பட்டியல்களைப் புதுப்பிக்க வேண்டும்.
இந்தியாவின் தேர்தல் ஜனநாயகத்தின் நேர்மையையும் நம்பகத்தன்மையையும் மீட்டெடுக்க வேண்டும்.
நமது ஜனநாயக உரிமையைப் பாதுகாக்க, விவசாயிகள், தொழிலாளர்கள், பெண்கள், இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் அனைத்துப் பொதுமக்களும் கலந்து கொள்கின்றனர்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.