Times of Puducherry

பண்பாட்டுத்துறை கவிஞர் புதுவைச் சிவம் அவர்களின் 119வது பிறந்தநாள் விழா

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
24 Oct 2026 • 11:39 AM
puduvai-sivam-b'day-observed-by-art-and-culture-dept-rajavelu-headed

புதுச்சேரி அரசு, கலை, பண்பாட்டுத்துறை சார்பில் கவிஞர் புதுவைச் சிவம் அவர்களின் 119வது பிறந்தநாள் விழாவை வெங்கட்டா நகர் தமிழ்ச் சங்கத்தில் சிறப்பாக நடத்தியது.

கவிஞர் புதுவைச் சிவம் அவர்கள் கவிதை, நாடகம், இசைப்பாடல், கட்டுரை, சிறுகதை. காவியம், மொழிப்பெயர்ப்பு என பல்வேறு இலக்கிய பிரிவுகளில் படைப்பிலக்கியங்களைத் தந்து புதுவைக்குப் புகழ் சேர்த்த பன்முகப் படைப்பாளர். பகுத்தறிவு, சீர்திருத்தம், பெண் விடுதலை. அனைவருக்கும் கல்வி, தொழிலாளர் நலன், சாதி ஒழிப்பு என பல்வேறு துறைகளில் தனது படைப்புகளின் மூலமும், இயக்கவழியிலும் சமூக சேவை செய்த உயர்ந்த பண்பாளர். தமிழ் மொழியின் மேன்மைக்காக பல்வேறு வகையிலும் தியாகங்கள் புரிந்தவர்.

பண்பாட்டுத்துறை கவிஞர் புதுவைச் சிவம் அவர்களின் 119வது பிறந்தநாள் விழா

கவிஞர் புதுவைச் சிவம் அவர்களின் பிறந்தநாள் விழாவை புதுச்சேரி அரசு ஆண்டுதோரும் கொண்டாடி வருகிறது. அந்த வகையில் கவிஞர் சிவம் அவர்களின் 119வது பிறந்தநாள் விழாவை கலை, பண்பாட்டுத் துறை அமைச்சர் P. ராஜவேலு, துவக்கிவைத்து தலைமையுரையாற்றினார். ராசு ரிதம்ஸ் கிராமிய இசைக்குழுவினரின் இசை நிகழ்ச்சியும், கலைமாமணி கலக்கல் காங்கேயன் இன்னிசை பட்டிமன்றம் நிகழ்ச்சியும் நடைபெற்றது. முன்னதாக முனைவர் அண்ணா ஜெகன் அவர்கள் கவிஞர் புதுவைச் சிவம் அவர்களை குறித்து சிறப்புரை ஆற்றினர். தமிழ்மாமணி புலவர் ந. பூங்கொடி பராங்குசம், முனைவர் சிவ. இளங்கோ, ஆகியோர் முன்னிலை வகித்தனார்.

பண்பாட்டுத்துறை கவிஞர் புதுவைச் சிவம் அவர்களின் 119வது பிறந்தநாள் விழா

நிகழ்ச்சியின் முனைவர் ச. பட்டம்மாள் அவர்கள் தலைமையில் “நாட்டுக்கு நல்லது கூற வந்தால்” என்ற தலைப்பில் பல்வேறு பாவலர்களின் கவியரங்கம் நடைபெற்றது. நிறைவாக கலை. பண்பாட்டுத்துறை இயக்குநர் S. சக்திவேல் நன்றியுரையாற்றினார்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top