Times of Puducherry
இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் பதவிவிலக வலியுறுத்தி டெல்லியில் இந்திய தேர்தல் கமிஷனை நோக்கி இந்தியா கூட்டணி சார்பில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பேரணி நடத்தினர். அப்போது எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி உள்பட பலர் கைது செய்யப்பட்டனர்.
இந்தநிலையில் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்து புதுச்சேரி ராஜா தியேட்டர் சிக்னல் பகுதியில் காங்கிரஸ் கட்சியினர் நேற்று இரவு திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. தலைமை தாங்கினார். முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி முன்னிலை வகித்தார்.
போராட்டத்தில் இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும், வாக்குச்சீட்டு முறையை மீண்டும் அமல்படுத்தவேண்டும், ராகுல்காந்தி உள்பட கைது செய்யப்பட்ட காங்கிரஸ் தலைவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.