Times of Puducherry
புதுச்சேரி கேரம் அகாடமி மற்றும் பாரதி ஃபவுண்டேஷன் இணைந்து நடத்திய 19-வது மாநில அளவிலான ‘சி.எம் – பி.எம் டிராபி’ பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான கேரம் சாம்பியன்ஷிப் போட்டி, உப்பளத்தில் உள்ள ராஜீவ் காந்தி எஸ்டோர் மைதானத்தில் (Rajiv Gandhi Indoor Stadium) சிறப்பாக நடைபெற்று முடிந்தது.
அக்டோபர் 16, 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் நடைபெற்ற இப்போட்டியை மாண்புமிகு பொதுப்பணித்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் துவக்கி வைத்தார்.
5-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை, 9 மற்றும் 10-ஆம் வகுப்பு, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு, கல்லூரிகள் மற்றும் 22 முதல் 60 வயது வரையிலான ஆண்கள், பெண்கள் என பல்வேறு பிரிவுகளில் திரளான போட்டியாளர்கள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.
இப்போட்டியின் நிறைவு நாளான இன்று நடைபெற்ற நாக்-அவுட், காலிறுதி, அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிகளின் முடிவில், வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பரிசளிக்கும் பிரம்மாண்ட நிறைவு விழா (Valedictory Function) நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பாரதி ஃபவுண்டேஷன் நிறுவனரும் தலைவருமான ராஜகோபால் சுவாமி வரவேற்று பேசினார். புதுச்சேரி பத்திரிகையாளர்கள் சங்கத்தின் நிறுவன தலைவர் டி. ஜி. மனோகர் வாழ்த்துரை ஆற்றினார். சிறப்பு அழைப்பாளராக அன்பழகன் அவர்களும், கௌரவ விருந்தினராக புதுச்சேரி பாரதிய ஜனதா கட்சி மாவட்ட பொறுப்பாளர் க. வெற்றிச்செல்வம் கலந்து கொண்டு, வெற்றி பெற்ற போட்டியாளர்களுக்கு கேடயங்கள், சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை வழங்கி பாராட்டி கௌரவித்தனர்.
இப்போட்டியில் முதல் 8 இடங்களைப் பிடித்த போட்டியாளர்கள், அடுத்து வரவிருக்கும் மாநில அளவிலான தரவரிசை கேரம் போட்டிகளில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர். மேலும், வெற்றி பெற்றவர்கள் அகில இந்திய கேரம் சாம்பியன்ஷிப் போட்டியில் புதுச்சேரி மாநிலத்தின் சார்பில் பங்கேற்று விளையாட தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.நிகழ்ச்சியின் நிறைவாக, புதுச்சேரி கேரம் அகாடமி நிறுவனர் சதீஷ் நன்றி உரை ஆற்றினார்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.