Times of Puducherry

பருவமழையினை முன்னிட்டு நீர் நிலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளின் அருகில் வசிக்கும் பொதுமக்களுக்கு ஆட்சித்தலைவர் அறிவுறுத்தல்

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
24 Oct 2026 • 2:05 PM
guidlines-for-people-residing-near-water-bodies-and-low-lying-area-collector

பருவமழையினை முன்னிட்டு நீர் நிலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளின் அருகில் வசிக்கும் பொதுமக்கள், கீழ்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றி பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில் குமார் தெரிவித்துள்ளார்.

கனமழை ஏற்படும் பொழுது பொதுமக்கள் நீர்நிலைகள் மற்றும் ஆற்றில் குளிக்கச் செல்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். பொதுமக்கள் அனைவரும், இடி மின்னலுடன் கனமழை பெய்து வரும்போது, திறந்த வெளியில் நிற்பதையும், நீர்நிலைகளில் குளிப்பதையும், மரங்கள் மற்றும் உலோக கட்டமைப்புகளின்கீழ் நிற்பதையும் முற்றிலும் தவிர்க்க வேண்டும். மழை/வெள்ளநீர் தேங்கும் இடங்களில் மற்றும் மின் கம்பங்களில் கால்நடைகளை கட்டிவைக்க கூடாது.

வெள்ளப்பெருக்கு குறித்து அறிவிப்பு வெளியிட்டவுடன் கால்நடைகளை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும். வெள்ளப் பெருக்கு ஏற்படும் சமயங்களில் தாழ்வான பகுதிகளிலும், நீர்நிலைகளின் இரு கரைகளிலும் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவதோடு, தங்களது ஆதார் / குடும்ப அட்டை உள்ளிட்ட முக்கியமான ஆவணங்களை நெகிழி உறைகளில் வைத்து பத்திரப்படுத்திக்கொள்ள வேண்டும். பேரிடர் காலங்களில், பொதுமக்கள் டார்ச்லைட், மருந்துகள் போன்ற அத்தியாவசிய பொருட்களை வைத்திருக்க வேண்டியது அவசியம் ஆகும். கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பேரிடர் தொடர்பாக பொதுமக்கள் அளிக்கும் புகார்களுக்கு நடவடிக்கைகள் மேற்கொள்ள, 24 மணி நேரமும் செயல்படும் வகையில் அவசரக்கால கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது.

கட்டணமில்லா தொலைபேசி எண் – 1077 மற்றும் 04142 – 220700 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு, மழை, வெள்ளம் மற்றும் பேரிடர்கள் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம். பெறப்படும் புகார்கள் மீது, உடனடி நடவடிக்கை எடுக்கும் பொருட்டு, கட்டுப்பாட்டு அறையில் சுழற்சி முறையில் பணிபுரியும் அலுவலர்கள் மூலம் புகார்கள், சம்பந்தப்பட்ட துறைக்கு நேரடியாக தெரிவிக்கப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்ட நிர்வாகம் பொதுமக்களின் தேவைகளை அறிந்து விரைவாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள தயார் நிலையில் உள்ளது. எனவே பொதுமக்கள் அரசு தெரிவிக்கும் வழிமுறைகளை கடைபிடிக்குமாறும், எவ்வித அச்சமும் கொள்ளவேண்டாம் எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top