Times of Puducherry

தமிழக நீர்பாசன மேலாண்மை மற்றும் பாசன கட்டமைப்பிற்கு உலகளாவிய அங்கீகாரம்

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
24 Oct 2026 • 12:23 PM
global-recognition-for-managing-irrigation-infrastructure

தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறை அமைச்சர் ஆனந்த், MLA கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள பேச்சிப்பாறை அணை, 2026-ஆம் ஆண்டிற்கான உலகப் பாரம்பரிய பாசனக் கட்டமைப்பாகத் தேர்வு செய்யப்பட்டு, பன்னாட்டுப் பாசனம் மற்றும் வடிகால் ஆணையத்தால் (ICID) வழங்கப்பட்ட விருது மற்றும் சான்றிதழை, தலைமைச் செயலகத்தில் காண்பித்து, நீர்வளத்துறை அதிகாரிகள் வாழ்த்து பெற்றனர்.

இந்நிகழ்வில், நீர்வளத்துறை அரசு செயலாளர் பிரசாந்த் மு. வடநேரே, இ.ஆ.ப., நீர்வளத்துறை முதன்மைத் தலைமைப் பொறியாளரும், தலைமைப் பொறியாளருமான (பொது) எஸ். கோபாலகிருஷ்ணன், மாநில அணைகள் பாதுகாப்பு அமைப்பின் தலைமைப் பொறியாளர் எஸ். ரமேஷ் மற்றும் நாகர்கோவில் கோதையாறு வடிநிலக் கோட்ட செயற்பொறியாளர் வசந்தி ஆகியோர் உடனிருந்தனர்.

நூறு ஆண்டுகளுக்கும் மேலான பழமையான பாசனக் கட்டமைப்புகளில், பாசன வேளாண்மை, பொறியியல் தொழில்நுட்பம், உணவு உற்பத்தி மற்றும் விவசாயிகளின் சமூகப் பொருளாதார மேம்பாட்டிற்குச் சிறப்பான பங்களிப்பை வழங்கிய கட்டமைப்புகளைப் பன்னாட்டுப் பாசனம் மற்றும் வடிகால் ஆணையம் உலகப் பாரம்பரிய பாசனக் கட்டமைப்புகளாக அங்கீகரித்து வருகிறது.

அந்த வகையில், 1906-ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட பேச்சிப்பாறை அணை, அதன் வரலாற்றுச் சிறப்பு, பாசனப் பங்களிப்பு மற்றும் நீர்வள மேலாண்மையில் கொண்டுள்ள முக்கியத்துவத்தைப் போற்றும் வகையில், 2026-ஆம் ஆண்டிற்கான உலகப் பாரம்பரிய பாசனக் கட்டமைப்பாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

பிரான்ஸ் நாட்டின் மார்செல் நகரில் நடைபெற்ற பன்னாட்டுப் பாசனம் மற்றும் வடிகால் ஆணையத்தின் 26-வது பன்னாட்டு மாநாடு மற்றும்
77-வது பன்னாட்டு செயற்குழுக் கூட்டத்தின்போது, 14.10.2026 அன்று இவ்விருதும் சான்றிதழும் வழங்கப்பட்டன.

தமிழ்நாட்டின் நீர்வள மேலாண்மைப் பாரம்பரியத்திற்கும், நீண்டகாலப் பாசனக் கட்டமைப்புகளின் சிறப்பிற்கும் உலகளாவிய அங்கீகாரம் கிடைத்திருப்பது பெருமைக்குரியதாகும்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top