Times of Puducherry

மோடியை அவதூறாக பேசிய பல்கலைக்கழக மாணவர்களை கண்டித்து புதுச்சேரி பிஜேபி இளைஞர் அணிகண்டன ஆர்ப்பாட்டம்

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
24 Oct 2026 • 11:50 AM
defamatory-speach-abt-modiji-protest-by-bjp-youth-wing

பிரதமர் நரேந்திர மோடியை அவதூறாக பேசிய பல்கலைக்கழக மாணவர்களை கண்டித்து புதுச்சேரி பிஜேபி இளைஞர் அணி சார்பில் பல்கலைக்கழக நுழைவு வாயில் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடியை அவதூறான வார்த்தைகளாலும் அவமானப்படுத்தும் விதமாக பேசி சமூக வலைதளங்களில் பதிவுகள் வெளியானது.

மோடியை அவதூறாக பேசிய பல்கலைக்கழக மாணவர்களை கண்டித்து புதுச்சேரி பிஜேபி இளைஞர் அணிகண்டன ஆர்ப்பாட்டம்

இதனை கண்டித்தும் பிரதமர் நரேந்திர மோடி மீது அவதூரை பரப்பிய பல்கலைக்கழக மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், படிப்பை முடித்து மாணவர்கள் என்ற போர்வையில் தங்கியிருக்கும் சமூக விரோதிகளை உடனடியாக பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும், சமூக விரோத செயல்களை ஈடுபடும் மாணவர்களுக்கு உடந்தையாக செயல்படும் பாதுகாப்பு அதிகாரியை கைது செய்ய வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரி பிஜேபி இளைஞர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் பல்கலைக்கழக நுழைவு வாயில் முன்பு நடைபெற்றது.

மாநில இளைஞரணி தலைவர் ஆடலரசன் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாநில பொதுச் செயலாளர்கள் மோகன் குமார் மற்றும் லட்சுமி நாராயணன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு மாணவர்களை கண்டிக்கும் விதமாக கண்டன பதாகைகளை கையில் பிடித்தபடி கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.

சுமார் ஒரு மணி நேரம் போராட்டம் நடைபெற்றும் நிர்வாகத்தின் சார்பில் பேச்சுவார்த்தை நடத்த முன் வராததால் பல்கலைக்கழக நுழைவு வாயில் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர், இதனை அடுத்து போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய பதிவாளர் சமூக விரோத செயல்களில் ஈடுபட்ட மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர் என்ற தகவலை தெரிவித்தார் இதனை அடுத்து பிஜேபியினர் போராட்டத்தை கைவிட்டு கலந்து சென்றனர், புதுச்சேரி பல்கலைக்கழகத்தை கண்டித்து பிஜேபியினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் போலீசார் குவிக்கப்பட்டனர்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top