Times of Puducherry
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே அடரி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகின்றது இந்த பள்ளியில் 70 பதிற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படித்து வருகின்றனர் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்ட இந்தப் பள்ளியின் மேற்கூரை பெயர்ந்து விழுந்து கம்பிகள் வெளியில் தெரியும் அவல நிலையில் உள்ளது.
இதனால் பெற்றோர்கள் அச்சத்துடனே பள்ளிக்கு மாணவர்களை தினம் தோறும் அனுப்பி வருவதாக குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர் மேற்கூரை மேலும் இடிந்து விடும் அபாய நிலையில் உள்ளதால் சேதமடைந்துள்ள பள்ளி கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டித் தர வேண்டும் என அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளதாக குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர் அசம்பாவிதம் நடைபெறும் முன்னர் சேதமடைந்துள்ள கட்டிடத்தை அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்டித் தர வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கின்றனர்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.