Times of Puducherry

மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் ராஜ்பவன் தொகுதியில் உள்ள வாய்க்கால்களை நேரில் ஆய்வு

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
24 Oct 2026 • 1:52 PM
collector-inspected-big-cannal-in-rajbavan-constituency

ராஜ் பவன் தொகுதியில் உள்ள பெரிய வாய்க்காலை சுத்தம் செய்தாலே சாலையில் மழை தண்ணீர் தேங்கி நிற்காது என்று பொதுமக்கள் புதுச்சேரி கலெக்டர் குலோத்தங்கனிடம் புகார் அளித்தனர். இதன் பேரில், தொகுதியில் உள்ள வாய்க்கால்களை நேரில் மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன் ஆய்வு செய்து பொது மக்களின் அன்றாட பிரச்சினைகளை கேட்டு சரி செய்வதாக உறுதி அளித்துள்ளார்.

இந்த ஆய்வின்போது ராஜ்பவன் தொகுதி சட்டமன்ற உறுப்பினர், பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர், புதுச்சேரி நகராட்சி ஆணையர், சுகாதார அலுவலர் மற்றும் பொதுப்பணித்துறை நீர்ப்பாசனப் பிரிவு அதிகாரிகள் உடனிருந்தனர்.

மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் ராஜ்பவன் தொகுதியில் உள்ள வாய்க்கால்களை நேரில் ஆய்வு

அப்பகுதி பொதுமக்கள் தங்களது குறைகளையும், அன்றாடம் எதிர்கொள்ளும் அடிப்படைப் பிரச்சினைகளையும் மாவட்ட ஆட்சியரிடம் எடுத்துரைத்தனர்.

மாவட்ட ஆட்சியர் அவர்களைச் பொதுமக்கள் சந்தித்து, பகுதியின் முக்கியப் பிரச்சினைகளை நேரில் எடுத்துரைத்தினர் குறிப்பாக, ராஜ்பவன் தொகுதியில் பெரிய வாய்க்காலில் தேங்கியுள்ள கழிவுகள் மற்றும் கட்டுமானக் குப்பைகளை அகற்றுதல், சாலைகளிலும் வாய்க்கால்களிலும் தேங்கியுள்ள குப்பைகளை முறையாக அகற்றி, தூய்மையைப் பராமரித்தல் ஆகியவற்றின் அவசியத்தை வலியுறுத்தினர்.

பொதுமக்களின் பிரச்சினைகளுக்கு விரைந்து தீர்வு காணத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top