Times of Puducherry
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த சத்திய மங்கலம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட ஆலம் பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவடிவேலு பவானி தம்பதியினரின் 7 வயது மகள் ஹேமலதா என்ற ஹேமாவதி. இவள் அதே கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் 2ம்வகுப்பு படித்து வந்தாள்.
ஹேமலதாவுக்கு பெற்றோர், தோழிகள் மற்றும் உறவினர்களுடன் பிறந்த நாளை கேக் வெட்டி மகிழ்ச்சியுடன் கொண்டாடினாள். பின்னர் அன்று இரவு பெற்றோருடன், வீட்டில் படுத்து தூங்கினாள் மறுநாள் அதிகாலை, வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ஹேமலதா திடீரென மர்மமான முறையில் மாயமானாள்.
இதுகுறித்து சிறும் ன் தாய் பவானி, சத்தியமங்கலம் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் சிறுமியை கண்டுபிடிக்க நூற்றுக்கும் க்கும்மேற்பட்ட போலீசார், அக்கிராமத்தில்களமிறக்கப்பட்டனர். பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரணை நடத் தியதுடன், சிறுமியை கண்டு பிடிக்கபல இடங்களில் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
இருப்பினும் சிறுமி மாயமாகி 14 நாட்களுக்கு மேலாகியும், சிறுமியைப்பற்றி இதுவரையிலும் எந்தவித துப்பும் துலங்கவில்லை. இதனால் சிறுமி என்ன ஆனாள், எங்கு இருக்பேகிறாள், அவளின் கதி என்ன? என்பதை கண்டுபிடிக்க முடி முடியாமல் போலீசார் திணறினர்.
காவல்துறைக்கே சவால் அளிக்கும் வகையில் அமைந்துள்ள இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி போலீசாரின் விசாரணைக்கு மாற்ற வேண்டும்என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் பலரும் கோரிக்கை விடுத்தனர். இதன் அடிப்படையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு இவ்வழக்கு சி.பி.சி.ஐ.டி போலீசாரின் விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணையை தொடங்கினர்.
சிறுமி காணாமல் போய் 14 நாட்கள் ஆகிற நிலையில் இன்னும் எந்தவித துப்பும் துலங்காத நிலையில்சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணையை தொடர்ந்தனர். விசாரணை அதிகாரியான போலீஸ் சூப்பிரண்டு கீதா தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ரேவதி, பாலமுருகன் மற்றும் போலீசார் ஆலம்பூண்டியில் முகாமிட்டு சிறுமியின் தாய் பவானி, தந்தை வடிவேலு மற்றும் உறவினர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.
அதுபோல் கிராம மக்கள் பலரிடமும் விசாரணை நடத்தினர். மேலும் சம்பவ இடத்தை வரைபடமாக்கி ஆய்வு செய்தனர். அதோடு அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராகாட்சி பதிவுகள், செல்போன் டவர் ஆய்வு என பல்வேறு கோணங்களில்ணையை தீவிரப்படுத்தியுள்ளனர். 14 நாட்களாகியும் மகள் கிடைக்காததால் பெற்றோர் கதறி அழுது வரும் நிலையில்,
சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணையில் விரைவில் உண்மை வெளிவரும் என கிராம மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.பல்வேறு கேள்விகள் கேட்டாலும் ஒரே பதில்தான், எங்கள் குழந்தைஹேமலதாவுக்கு என்னவாயிற்று என்று எங்களுக்கு தெரியாது; நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை என்று அவளது தாய் பவானி கூறினார்.
போலீசார், தீவிர விசாரணையில் இறங்கியுள்ளதுடன் சிறுயை கண்டுபிடிக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே சிறுமியின் தாய் பவானி செய்தியாளர்களும் பேட்டி அளித்தார். என் குழந்தையின் பிறந்த நாளை கேக் வெட்டி மகிழ்ச்சியாக கொண்டாடினோம். இந்த மகிழ்ச்சி நீண்ட நேரம் நீடிக்கவில்லை. அன்று இரவு சாப்பிட்டு விட்டு 11 மணி வரை விழித்திருந்து அதன்பிறகுதான் தூங்கச்சென்றோம். என் அருகில் படுத்திருந்த ஹேமலதா என் கை மீது தலையை வைத்து என்னை கட்டிப்பிடித்துக்கொண்டு தூங்கினாள். இன்னொருபக்கத்தில் எனது மாமியாரும், கணவரும் படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர். வழக்கமாக நாங்கள் காற்றுக்காக வீட்டின் முன்பக்க கதவின் ஒரு பகுதியை திறந்து வைத்தபடி தான் தூங்குவோம். அன்றும் அப்படித்தான் தூங்கினோம்.
எனது குழந்தை 2-ம் வகுப்பு படித்தாலும் ரொம்ப தைரியமானவள். எப்போதுமே மகிழ்ச்சியாக இருப்பாள் பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்தபிறகு வெளியே எங்கும் செல்ல மாட்டாள். சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் எங்கள் வீட்டின் அருகே தோழிகளுடன் விளையாடுவாள். அவளுக்கு இரவில் தனியாக வெளியே செல்லும் பழக்கமெல்லாம் கிடையாது. என் குழந்தைக்கு என்ன ஆச்சோ என்று தெரியவில்லை. எங்களுக்கு யார் மீதும் எந்த சந்தேகமும் இல்லை. நாங்கள் யாரிடமும் எந்த சண்டை, சச்சரவுக்கும் சென்றதில்லை. அந்த கடவுள் மீதான நம்பிக்கையினால் அவள் உயிரோடுதான் இருக்கிறாள் என்று நம்புகிறேன்.
இதுவரை எங்கள் ஊரில் இப்படியொரு எந்த சம்பவமும் நடந்ததே இல்லை. போலீசார் எங்களிடம் துருவி, துருவி கேள்விகேட்கிறார்கள்.எனக்கு தெரிந்த எல்லாவற்றையும் சொல்லிவிட்டேன், உள்ளூர் போலீசார் ஒரு மாதிரி விசாரித்தனர். இப்போது சி.பி.சி.ஐ.டி. போலீசார் வேறு மாதிரியாக விசாரிக்கிறார்கள். பல கேள்விகள் கேட்டாலும் ஒரே பதில்தான். எனது குழந்தை தூங்கியது வரைதான் தெரியும். அதற்குபிறகு என்ன நடந்தது, என்னவாயிற்று என்று எங்களுக்கு தெரியாது. நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை.
உள்ளூர் போலீசார், என்னிடம் உனது குழந்தை கிடைக்கவேண்டுமென்றால் தைரியமாக உண்மையை சொல்லும்படி கேட்டு மிரட்டினார்கள். என் குழந்தையை நானே தூக்கி கொடுத்து விட்டதாகவும், பணத்துக்காக விற்று விட்டாயா என்றும் கேள்வி கேட்டனர். குழந்தையை தூக்கிக்கொடுக்கவா, இத்தனை நாட்கள் வரமிருந்து பெற்றேன். வயிற்றில் இருக்கும்போதே ஏதாவது செய்திருக்கலாமே? என்று போலீசாரிடம் கூறினேன். ஆனால் அவர்கள் நம்பவில்லை. நாங்கள்தான் ஏதோ செய்துவிட்டோம் என சந்தேகப்படுகிறார்கள்.
எங்கள் உறவினர் சக்திவேல் என்பவர் கடலாடிபகுதியில் உள்ள ஒரு ஜோதிடரிடம் சென்று ஜோதிடம் பார்த்துவிட்டு வந்தார், அப்போது என் குழந்தைக்கு நீண்ட ஆயுள் இருக்கிறது என்றும், உயிருக்கு ஆபத்து இல்லை என்றும், இன்னும் 4 நாளில் குழந்தை கிடைக்கும் என்றும் அந்த ஜோதிடர் கூறியுள்ளார். எங்கள் குழந்தை காணாமல் போனதில் இருந்து மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறோம். ஒருநாளைக்குஒரு வேளை சாப்பாடுதான் சாப்பிடுகிறோம், அதுவும் தொண்டையில் இறங்கவில்லை. எங்கள் குழந்தை நினைப்பாகவே உள்ளது.எங்களையே சுற்றி, சுற்றி வந்து விளையாடுவாள், அவள் இல்லாதது மிகுந்த வேதனையாக உள்ளது. எங்கள் மகள் உயிருடன் கிடைக்க வேண்டும், அப்போதுதான் நாங்கள் எந்த பழிச்சொல்லுக்கும் ஆளாகாமல் இருக்க முடியும்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.