Times of Puducherry
திருச்சி விமானநிலைய நிர்வாக அலுவலக கட்டிடத்தில், சர்வதேச கூரியர் நிறுவனங்களின் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்திற்கு இந்திய விமானநிலைய ஆணையக்குழும (ஏஏஐ) தலைமை நிர்வாக அதிகாரி செல்வகுமார் தலைமை வகித்தார். விமானநிலைய இயக்குனர் கோபாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.
இந்நிகழ்ச்சியில் திருச்சி எம்பி துரை வைகோ கலந்து கொண்டு விமான நிலைய, சுங்கத்துறை, ஏர்லைன்ஸ் அதிகாரிகள், கூரியர் நிறுவன பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, அவர் பேசுகையில், திருச்சி விமான நிலைய மேம்பாட்டுக்கு பல்வேறு முயற்சி மேற்கொள்ளப் பட்டு வருகிறது. கூடுதல் விமான மற்றும் கார்கோ மத்திய சேவைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு, விமான போக்குவரத்து அமைச்சகத்துடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கடந்த 2022ல் சர்வதேச கூரியர் கார்கோ சேவைக்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், இதுவரை தொடங்காமல் உள்ளது. விமான, சுங்கத்துறை ஊழியர்கள் பற்றாக்குறை, சரியான தகவல் பரிமாற்றம் இல்லாததால், இந்த வசதியை தொடங்குவது தாமதமானது.ஆனால், தற்போது, அந்தக் குறைகள் நீக்கப்பட்டு, கூரியர் கார்கோ சேவை தொடங்க ஆலோசனை கூட்டம் நடத்தப்படுகிறது.
விமானநிலைய நிர்வாக கட்டுப்பாட்டில், திருச்சி விமானநிலையத்தில் நவம்பரில் கார்கோ சேவை தொடங்க ஏற் பாடுகள் நடக்கிறது. இந்த சேவைக்கு புதிய டெர்மினல் அமைக்காமல், ஏற்கனவே உள்ள கார்கோ முனையத்தில் ஆரம்பிப்பது, மாதத்துக்கு 250 மெட்ரிக்டன் எட்டும்போது, தனி முனையம் அமைப்பது குறித்து முடிவு செய்யப்படும். தெற்கு, மேற்கு, மத்திய மாவட்ட வளர்ச்சிக்கு கார்கோ ஏற்றுமதி தேவை என்பதால் அதற்கான சாத்தியக்கூறு ஆலோசிக்கப்படும் என்றார்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.