Times of Puducherry
மாத்திரைகளுக்கு பின்புறம் அலுமினியம் ஃபாயில் பயன்படுத்தப்பட்டு இருப்பதை பார்த்திருப்போம். இதற்கு பின்னால் பல முக்கிய அறிவியல் மற்றும் பாதுகாப்பு காரணங்கள் உள்ளன.
ஈரப்பதத்தில் இருந்து பாதுகாப்பு
மாத்திரைகளில் உள்ள வேதிப்பொருட்கள் காற்றில் உள்ள ஈரப்பதம் அல்லது ஆக்ஸிஜனுடன் வினைபுரிந்து அவற்றின் வீரியத்தைக் குறைக்கலாம் அல்லது மாத்திரைகளை கெட்டுப்போகச் செய்யலாம். அலுமினியம் ஃபாயில் காற்று ஈரப்பதம் நீராவி உள்ளே செல்ல முடியாத அளவிற்கு மாத்திரைகளை முழுமையாக பாதுகாக்கிறது.
வெளிச்சம் மற்றும் சூரிய ஒளியைத் தடுத்தல்
பல வகையான மருந்துகள் ஒளி மற்றும் சூரியனின் புற ஊதாக் கதிர்கள் பட்டால் சிதைந்துவிடும். அலுமினியம் ஃபாயில் ஒளிப்புகாத் தன்மையைக் கொண்டிருப்பதால் ஒளியினால் மருந்துகளின் வேதியியல் அமைப்பு மாறுவதை இது தடுக்கிறது.
தூசி அல்லது பாக்டீரியா
அலுமினியம் ஃபாயில் பயன்படுத்துவதன் மூலம் மாத்திரைகள் மீது பாக்டீரியா, தூசி மற்றும் கிருமி படராமல் முற்றிலும் சுகாதாரமான முறையில் வைத்திருக்க உதவுகிறது.
தனித்தனி டோஸ் பாதுகாப்பு
ஒரு பாட்டிலில் மாத்திரைகளை அடைத்து வைத்தால் ஒவ்வொரு முறை பாட்டிலை திறக்கும் போதும் எல்லா மாத்திரைகளிலும் காற்று படும். ஆனால் அலுமினியம் ஃபாயிலில் ஒரு மாத்திரையை எடுக்கும் பொழுது மற்ற மாத்திரைகள் பாதுகாப்பாகவே இருக்கும்.
எளிய பயன்பாடு
அலுமினியம் ஃபாயில் மிகவும் மெல்லியதாகவும், கிழியக்கூடியதாகவும் இருப்பதால் விரல் கொண்டு லேசாக அழுத்தினால் மாத்திரை பிளாஸ்டிக் குமிழியில் இருந்து ஃபாயிலை பிய்த்துக்கொண்டு எளிதாக வெளியே வந்துவிடும்.
நீண்ட ஆயுள்
மருந்துகள் உற்பத்தி செய்யப்பட்ட நாளிலிருந்து அவற்றின் காலாவதி தேதி வரை வீரியம் குறையாமல் நீண்ட நாட்கள் இருக்க இந்த அலுமினியம் ஃபாயில் பேக்கிங் மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.