Times of Puducherry

ஸ்ரேயாஸ் அய்யர் அதிரடி சதம்: மேற்கிந்திய தீவுகள் அணியை பந்தாடிய இந்தியா: டி20 தொடரில் முன்னிலை

எழுதியவர்: செய்தி ஆசிரியர்
1 நிமிட வாசிப்பு
7 Oct 2026 • 6:23 AM
India vs WI first t20 Scorecard and Result

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யரின் அதிரடி சதத்தால் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி இந்திய அணிக்கு எதிராக 3 ஒருநாள் போட்டி, 5 டி20 போட்டிகள கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலில் நடந்த ஒருநாள் போட்டித்தொடரில் முதல் 2 போட்டிகளில் இந்தியாவும், கடைசி போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியும் வெற்றி பெற்றது. இதனால் இந்திய அணி தொடரை 2-1 என்ற கணககில் வெற்றி பெற்றது.

அடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி லக்னோவில் நேற்று நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த மேற்கிந்திய தீவுகள் அணி 19.1 ஓவர்களில் 171 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. கேப்டன் ஹேப் 37 பந்தகளில் 52 ரன்களும், ரூதர்போர்டு 34 பந்துகளில் 56 ரன்களும், அகில் ஹூசேன் 15, பூரன் 12 ஆகியோர் இரட்டை இலக்க ரன்களை எடுத்தனர்.

மற்ற வீரர்கள் ஒற்றை இலக்கில் ஆட்டமிழந்து வெளியேறினர். இந்திய அணி தரப்பில் நமன்தீர் 3, குல்தீப் அக்சர் தலா 2, மயங்க் அர்ஷ்தீப் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

அடுத்து 172 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில், சாம்சன் 11, அபிஷேக் சர்மா 21 ஆகியோர் விரைவில் ஆட்டமிழந்தனர். 3.3 ஓவர்களில் 35 ரன்களுக்கு இந்திய அணி 2 விக்கெட்டுகள் இழந்த நிலையில், 3-வது விக்கெட்டுக்கு இஷான் கிஷன் – ஸ்ரேயாஸ் அய்யர் ஜோடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்சென்றது. இவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்கள் சேர்த்தனர்.

குறிப்பாக அரைசதம் கடந்து அசத்திய கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் இறுதியில் சதம் எடுத்து ஆட்டத்தை முடித்து வைத்தார். 14.4 ஓவர்களில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது, 43 பந்துகளை எதிர்கொண்ட ஸ்ரேயாஸ் அய்யர் 10 பவுண்டரி, 6 சிக்சருடன் 102 ரன்களும், இஷான் கிஷன் 27 பந்துகளில் 5 பவுண்டரியுடன் 37 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர்.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 2-வது போட்டி அக்டோபர் 9-ந் தேதி ராஞ்சியில் நடைபெறுகிறது.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top