Times of Puducherry
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை ரயில் நிலையத்தில் ஆய்வுகள் மேற்கொண்ட மதுரை மண்டல மேலாளர் ஓம் பிரகாஷ் மீனா ரயில் நிலையங்களில் அனைத்து ரயிலும் நின்று செல்ல போதிய தேவை இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என பேட்டியளித்தார்.
சிவகங்கை ரயில் நிலையத்தில் ரயில்வே துறையின் சார்பில் பல்வேறு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்நிலையில் தென்னக் ரயில்வே மதுரை மண்டல மேலாளர் பல்வேறு ரயில் நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டு வரும் நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி ஆகிய ரயில் நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டார். இதில் மானாமதுரை ரயில் நிலையம் அருகே இருந்த ஆக்கிரமிப்புகளை பாரபட்சமின்றி அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட அவர் அதனை தொடர்ந்து சிவகங்கை ரயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட அவர் பணிகளின் தரத்தினை மேம்படுத்த உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கேள்விகளுக்கு பதிலளிக்கையில் தற்போது நடைபெற்றுவரும் பணிகள் பெரும்பாலும் வழக்கமான மேம்பாட்டு பணிகள் தான் என்றும் இது அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகள் அல்ல என்றும் தெரிவித்ததுடன் முதல் கட்டத்தில் உள்ள ரயில் நிலையங்களில் மேம்படுத்தும் பணி நடைபெற்று வருவதாகவும். முதல்கட்ட மேம்பாட்டு பணிகள் முடிந்த ரயில் நிலையங்களில் இரண்டாம் கட்ட மேம்பாட்டு பணிகளை மேற்கொள்வோம் என்றும் இதேபோல் அடுத்தடுத்த கட்ட பணிகளை அனைத்து ரயில் நிலையங்களிலும் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் இந்த மேம்படுத்தும் பணிகளில் மின்சார வேலைகள், சிக்னல் மற்றும் தொலை தொடர்பு பணிகள், பொறியியல் பணிகள், பயனிகளுக்கான வசதிகள் என பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுவதுடன் ரயில் நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளிலும் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார். அதேபோல் பணிகள் திருப்திகரமாக உள்ளதா? என்கிற கேள்விக்கு அதிகாரிகள் எப்பொழுதும் முழு திருப்தி அடையமாட்டார்கள் என பேசியதுடன் இந்த ரயில் நிலையம் விரைவில் அம்ரித் பாரத் நிலையமாக வளர்ச்சி அடையும் என்றும் ரயில் நிறுத்தம் குறித்த கேள்விக்கு புதிய ரயில் சேவை மற்றும் நிறுத்தம் குறித்து தனது குழுவுடன் ஆய்வு செய்து முடிவு எடுக்கப்படும் என்றும் இன்றைய ஆய்வு ரயில் நிலையங்கள் மட்டுமே என தெரிவித்த அவர் நிறுத்தப்பட்ட ரயில்கள் மீண்டும் இயக்க பரிசீலிக்கப்படும் என்றும் ரயில்கள் நிறுத்த பயனிகள் எண்ணிக்கை அதிகம் இருக்க வேண்டும் என்றும் இந்த ரயில் நிலையத்தில் பயனிகள் எண்ணிக்கை குறைவு என்றும் வருவாயும் குறைவு என்றும் தெரிவித்த அவர் போதிய தேவைகள் இருந்தால் ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். இந்த ஆய்வு பணியில் ஏராளமான ரயில்வேத்துறை அதிகாரிகள் இருந்தனர்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.