Times of Puducherry
புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியில் 12:00 மணி நிலவரப்படி 50 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது தொடர்ந்து இளம் வாக்காளர்களும் முதியவர்களும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.
வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்று வருவதாகவும் 90% வாக்குகள் பதிவாகும் என்று எதிர்பார்ப்பதாக மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் தெரிவித்தார்.
புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்கு பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர்கள் ஆர்வமாக நீண்ட வரிசையில் நின்று வாக்குகளை செலுத்தி வருகின்றனர். குறிப்பாக இளம் வாக்காளர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர் அதேபோன்று முதியவர்களும் கடுமையான வெயிலையும் பார்க்காமல் வாக்குச்சாவடிக்கு சென்று தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர் இந்த நிலையில் இன்று 12:00 மணி நிலவரப்படி புதுச்சேரியில் 50 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது, தட்டாஞ்சாவடி மாவட்ட தொழில் மைய வாக்குச்சாவடியில் வாக்கு செலுத்திய நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா குமாரி தமக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
இதனிடையே செய்தியாளர்களை சந்தித்து மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் எந்தவித அசம்பாவிதங்கள் இன்றி வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். மக்களும் ஆர்வமுடன் வாக்களித்து வருகிறார்கள் வாக்குப்பதிவு முடிவில் 90% வாக்கு பதிவாகும் என்று நினைப்பதாகவும் தெரிவித்தார்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.