Times of Puducherry
தமிழ்நாடு அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சென்னையில் தொழில் முனைவோருக்கான ஐந்து நாள் “லேப்டாப் ஹார்டுவேர் மற்றும் சிப்-லெவல் பயிற்சி” வரும் 12.10.2026 முதல் 16.10.2026 வரை காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெற உள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது, இப்பயிற்சியில் ஆர்வமுள்ள தொழில் முனைவோர்கள் (ஆண்/பெண் /திருநங்கைகள்/ திருநம்பிகள்) 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் பயிற்சியில் கலந்து கொள்ளலாம். குறைந்தபட்ச கணிணி அறிவு வேண்டும், 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சியில் பங்கு பெறும் பயனாளிகக்கென குறைந்த வாடகையில் தங்கும் விடுதி உள்ளது. தேவைப்படுவோர் இதற்கு விண்ணப்பித்துப் பெற்று கொள்ளலாம்.
மேலும், இப்பயிற்சியின் கூடுதல் விவரங்களைப் பெறவும் மற்றும் முன்பதிவு செய்திடவும் www.editn.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளவும். கைபேசி 8668100181/ 9360221280 என்ற எண்களில் தொடர்பு கொள்ளவும். (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை.
பாடத்திட்டம்
நாள் – 1
நாள் – 2
நாள் – 3
நாள் – 4
நாள் – 5
முக்கிய குறிப்பு: பயிற்சி முடிவில் அரசு சான்றிதழ் வழங்கப்படும். மத்திய / மாநில அரசுகள் வழங்கும் நிதியுதவி திட்டங்கள் மற்றும் மானியங்கள் குறித்த விவரங்களும் பயிற்சியின் ஒரு பகுதியாக விளக்கப்படும்.
தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி: தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், இ.டி.ஐ.ஐ அலுவலக சாலை, சிட்கோ தொழிற்பேட்டை, ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, சென்னை – 600 032.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.