Times of Puducherry
பள்ளி மாணவர்களுக்கு கற்றல் சிரமங்கள், கல்லூரி மாணவ மாணவிகளுக்கு மனச்சோர் மூத்த குடிமக்களுக்கு நினைவாற்றல் குறைதல் இவை மூன்றும் மையப்படுத்தி இன்று முதலமைச்சரங்கசாமி தலைமையில் மூன்று மனநல பயன்பாடுகள் முதல்வர் அலுவலகத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் (PTU) மற்றும் தேசிய மனநலப் பணி (NMHM), புதுச்சேரி பிரிவு ஆகியோர்களின் கூட்டு பங்களிப்பாகும்.
புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் மற்றும் தேசிய மனநலப் பணி (NMHM), புதுச்சேரி பிரிவு இணைந்து மூன்று மனநல குறைபாடு மற்றும் அதன் தன்மையை கண்காணிக்கும் 3 செயலிகளான Mindora Py — கற்றலில் குறைபாடு உள்ள பள்ளி மாணவ மாணவியர்களுக்கு, Peace — கல்லூரி இளைஞர் இளைஞிகளுக்கு, AlzPredict — மூத்த குடிமக்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.
புதுச்சேரியில், பள்ளி மாணவர்களில் அதிகரித்து வரும் கற்றல் சிரமங்கள், கல்லூரி மாணவர்களில் ஒவ்வொரு 5 பேரில் ஒருவருக்கு மனச்சோர்வு அறிகுறிகள், மேலும் மூத்த குடிமக்களில் சுமார் 30% பேருக்கு நினைவாற்றல் குறைபாடு அல்லது மனச்சோர்வு காணப்படுவதால் அவற்றை களைய எளிதில் அணுகக்கூடிய தொழில்நுட்ப அடிப்படையிலான தீர்வு காண்பது அவசியமாகும்.
14 பட்டப்படிப்பு மாணவர்கள் (ECE & IT), 2025–26 கல்வியாண்டில், மூன்று புதுமையான மனநல பயன்பாட்டுக்கான செயலிகளை உருவாக்கியுள்ளனர் — 1. Mindora Py, 2. Peace, 3. AlzPredict. இந்த சாதனை, Prof. Dr. K. ஜெயந்தி (ECE, PTU), Dr. பிரதீப் திலகன் (மனநலத் துறை, PIMS, புதுச்சேரி), மற்றும் Dr. பாலன் ஸ்டீபன் பொன்னுமணி (மனநலத் துறை, GH, புதுச்சேரி & நோடல் அதிகாரி, NMHM) ஆகியோரின் வழிகாட்டுதலின் படி இது சாத்தியமாகிறது.
Mindora Py: 5–18 வயது பள்ளி மாணவர்களுக்கான இலவச ஆய்வு மற்றும் கண்காணிப்புக்கான செயலி. Peace: 18–22 வயது கல்லூரி இளைஞர்களின் மனநல ஆய்வு மற்றும் அதன் தன்மையை தொடர்ந்து ஆய்வு செய்ய மொபைல் பயன்பாடு. AlzPredict: 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கான வலை பயன்பாடு, அல்சைமர் நோயின் ஆரம்ப அறிகுறிகளை கண்டறிய மற்றும் தொடர் ஆய்வு செய்ய உதவுகிறது.
இந்த பயன்பாடுகள் எளிமையானவை, இலவசம், சந்தா தேவையில்லை, மேலும் வலை மற்றும் மொபைல் வடிவங்களில் கிடைக்கின்றன. இவை சரியான நேரத்தில் தேவையான மருத்துவ தலையீட்டை உறுதி செய்கின்றன, இத்தகைய மனநல நோய் அதிகரிப்பதனால் அரசுக்கு ஏற்படும் சங்கடங்களை குறைக்கின்றன, குடும்பங்கள், ஆசிரியர்கள் மற்றும் மருத்துவர்களை முன்னெச்சரிக்கையுடன் செயல்படச் செய்கின்றன.
புதுச்சேரி முதல்வர், சுகாதார மற்றும் குடும்ப நல இயக்குநர் cum NMHM இயக்குநர், PTU Vice Chaneclor பதிவாளர், உயர் அதிகாரிகள், பங்களிப்பாளர்கள் மற்றும் மாணவர்கள் முன்னிலையில், இந்த மூன்று பயன்பாடுகளை அதிகாரப்பூர்வமாக இன்று அறிமுகப்படுத்தினார்.புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் ECE மற்றும் IT துறைகளில் இருந்து சுமார் 14 பட்டப்படிப்பு மாணவர்கள் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி பாராட்டு சான்றிதழ்களை பெற்றனர்.
பேராசிரியர் டாக்டர் . K. ஜெயந்தி, ECE பேராசிரியர், PTU மற்றும் டாக்டர் பிரதீப் திலகன், நியூரோசேர்ஜன், PIMS ஆகியோரும், வழிகாட்டுதல் மற்றும் பங்களிப்புக்காக பாராட்டு சான்றிதழ்களால் வழங்கப்பட்டது. இன்று முதல் Mindora Py, Peace, AlzPredict ஆகியவை பள்ளி மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் மூத்த குடிமக்கள் நலனுக்காக அதிகாரப்பூர்வமாக செயல்படுத்தப்படுகின்றன.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.