Times of Puducherry

கைச்சின்னம் பொறிக்கப்பட்ட நோட்டீஸ்கள் வாக்கு சாவடி அருகே இறைக்கப்பட்டிருந்ததால் பரபரப்பு

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
6 Oct 2026 • 4:09 PM
congress-hand-symbol-notices-around-polling-booth

புதுச்சேரியில், வாக்குப்பதிவு நடைபெற்று வரும் தட்டாஞ்சாவடி தொகுதியில் பல்வேறு வாக்குச்சாவடிகளில் கைச்சின்னம் பொறிக்கப்பட்ட நோட்டீஸ்களை காங்கிரசார் வாரி இறைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது இதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சலீம் கண்டனம் தெரிவித்துள்ளதுடன் புகாரும் அளித்துள்ளார்.

காலை முதல் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்று வந்த நிலையில் தட்டாஞ்சாவடி தொகுதிக்கு உட்பட்ட சுப்பையா நகர், விவிபி நகர், பாக்கமுடையான் பட்டு, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காங்கிரஸார் கைச்சின்னம் பொறிக்கப்பட்ட நோட்டீஸ்களை வாரி இறைத்து சென்றனர். இதனால் வாக்குச்சாவடிகளில் பரபரப்பு நிலவியது.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சலீம், காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விநாயகம் தேர்தல் விதிமுறையை மீறி நடந்து கொண்டு உள்ளார் அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசார் மற்றும் தேர்தல் அதிகாரிகளிடம் புகார் அளித்தார். இது குறித்து பேசிய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சலீம்:

தொகுதி முழுவதும் பல்வேறு வாக்குச்சாவடிகளில் கைச்சின்னம் பொறிக்கப்பட்ட நோட்டீசை காங்கிரசார் வாரி இறைத்து விட்டு சென்றுள்ளனர் அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினார்.

தொகுதி முழுவதும் வாரி இறைக்கப்பட்ட கை சின்னம் பொறிக்கப்பட்ட நோட்டீஸ்களை தேர்தல் அதிகாரிகள் தூய்மை பணியாளர்கள் மூலம் விட்டு சுத்தம் செய்தனர். அமைதியான முறையில் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் பல்வேறு வாக்கு சாவடிகளில் கை சின்னம் பொறிக்கப்பட்ட நோட்டீஸ்களை வாரி இறைக்கப்பட்ட சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top