Times of Puducherry
தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்துடன் இணைந்துள்ள, தமிழ்நாடு அம்மா உணவக பணியாளர்கள் சங்கத்தின் சார்பாக சுமார 100க்கும் மேற்பட்டவர்கள் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாவட்ட தலைவர் சதீஷ் பாபு தலைமையில் அம்மா உணவக பணியாளர்கள் சங்க திருச்சி மாவட்ட தலைவர் அருணா தேவி மற்றும் உதவி இயக்குனர் ஆனந்த் ஆகியோர்கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
அம்மா உணவகங்களில் கடந்த 15 ஆண்டுகளாக எவ்வித ஊதிய உயர்வும் இன்றி பணியாற்றி வருகின்றனர். தினக்கூலி அடிப்படையில் பணிபுரிந்து வரும் அம்மா உணவக பணியாளர்களுக்கு ஆண்டுதோறும் அரசால் நிர்ணயம் செய்யப்படும் ஊதிய விகிதத்தை அடிப்படையாக கொண்டு உரிய ஊதிய உயர்வு வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரே மாதிரியான ஊதியம் மற்றும் பிடித்தம் அனைத்து மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் பணிபுரியும் அம்மா உணவக பணியாளர்களுக்கும் ஒரே மாதிரியான ஊதியம் வழங்குவதுடன் சட்டப்படி கிடைக்க வேண்டிய அனைத்து பலன்களும் அனைவருக்கும் ஒரே மாதிரியான முறையில் கட்டாயமாக நடைமுறைப்படுத்த வேண்டும்.
அனைத்து அம்மா மற்றும் அண்ணா உணவகங்கள் வழங்கப்படும் உணவுப் பொருட்கள் மற்றும் இடுபொருட்கள் தரமான முறையில் ஒரே மாதிரியான அளவில் குறித்த காலத்திற்குள் தொடர்ந்து வழங்கிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அம்மா உணவுகங்களில் பணிபுரியும் பணியாளர்களை மாநகராட்சி நகராட்சியில் பணிபுரியும் உயர் அலுவலர்கள் கண்ணியத்துடனும் மரியாதையுடனும் நடத்துவதற்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்கிட வேண்டும். அம்மா உணவகத்தில் பணிபுரியும் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.