Times of Puducherry

அரசு முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான Seat Matrix உடனடியாக வெளியிட வேண்டும் பெற்றோர் மாணவர் சங்கத் தலைவர் பாலா

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
8 Oct 2026 • 11:15 AM
pg-seat matrix-release-demand-bala

புதுச்சேரி அரசு முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான Seat Matrix உடனடியாக வெளியிட வேண்டும் என்று பெற்றோர் மாணவர் சங்கத் தலைவர் பாலா கவர்னருக்கு மனு கொடுத்துள்ளார். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:

ஒதுக்கீட்டுக்கான இடங்களின் விவரங்களையும் Seat Matrix வெளியிட்டு முதுநிலை படிப்பிற்கான விண்ணப்பங்களைப் பெற்று காலத்தோடு முதுநிலை மருத்துவ கலந்தாய்வினை நடத்திட வேண்டும் என்பதை தங்கள் கவனத்திற்கு கொண்டு வருகின்றோம்.

அரசு முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான Seat Matrix உடனடியாக வெளியிட வேண்டும் பெற்றோர் மாணவர் சங்கத் தலைவர் பாலா

2026-2027 PG (MD/MS) அகில இந்திய ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு MCC/NMC கவுன்சிலிங் தேதி 12.10.2026 அன்று தொடங்க உள்ள நிலையில் புதுச்சேரி மாநில மாணவர் சேர்க்கையை துரிதப்படுத்த வேண்டும்.

2026-2027 PG (MD/MS) முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான முதல் கட்ட கலந்தாய்வினை மருத்துவ கலந்தாய்வு கமிட்டி MCC 12.10.2026 தொடங்க உள்ள நிலையில் புதுச்சேரி சென்டாக் அமைப்பு 2026-2027 ஆம் கல்வியாண்டில் மொத்தம் அரசு (GQ) மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டில் (MQ & NRI) உள்ள Clinical மற்றும் Non-Clinical முதலாம் ஆண்டு மருத்துவ படிப்பிற்கான இடப்பகிர்வு (Seat Matrix) வெளியிட புதுவை அரசு சுகாதாரத்துறை தலையிட்டு தற்பொழுது சுகாதாரத்துறையில் நிலவிவரும் அசாதாரண சூழ்நிலையில் களைந்து, சமூதாயத்தில்
ஒடுக்கப்பட்ட பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள முதுநிலை மருத்துவ மாணவர்களின் சேர்க்கையை காலத்தோடு உறுதிப்படுத்த வேண்டும்.

புதுவை கல்விக்கட்டணக் குழுவின் தலைவர் உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசர் விமலா தலைமையிலான ஏற்கனவே முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கான 2026-2029 மூன்று ஆண்டு கல்விக்கட்டணத்தை நிர்ணயித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த கல்வியாண்டில் (2025-26) புதுச்சேரி மாநிலத்தில் உள்ள மூன்று தனியார் மருத்துவ கல்லூரி SVMC SMVC PIMS மற்றும் IGMC இந்திராகாந்தி அரசு மருத்துவ கல்லூரியில் உள்ள 352 முதுநிலை மருத்துவ இடங்கள் PG (MD/MS) 194 இடங்கள் அரசு ஒதுக்கீட்டு (Govt. Quota) இடங்களாகப் பெறப்பட்டது. (Clinical 142 இடங்கள், Non-clinical 52), அதேபோல் நிர்வாக ஒதுக்கீட்டில் (Management Quota) கடந்த 2025-26 இடங்கள் PG (MD/MS) இடங்கள் 158, (Clinical 124, Non-clinical 34). சென்டாக் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட்டது என்பதை தங்கள் கவனத்திற்கு
வருகின்றோம்.

ஆகையால் தற்பொழுது புதுவை சுகாதாரத்துறை (Health Department), சுகாதாரத்துறை இயக்குநரகம் (DMS), மற்றும் சென்டாக் நிர்வாகம் அக்டோபர் மூன்றாம் வாரத்தில் புதுச்சேரி அரசு ஒதுக்கீட்டுக்கான இடங்களின் விவரங்களையும் Seat Matrix வெளியிட்டு முதுநிலை படிப்பிற்கான விண்ணப்பங்களைப் பெற்று காலத்தோடு முதுநிலை மருத்துவ கலந்தாய்வினை நடத்திட வேண்டும் என்பதை
தங்கள் கவனத்திற்கு கொண்டு வருகின்றோம்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top