Times of Puducherry
தமிழ், தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம் என பல மொழிகளில் பல்வேறு திரைப்படங்களை இயக்கியுள்ள 95 வயதான இயக்குனர் சிங்கீதம் சீனிவாச ராவ் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.
இந்திய சினிமாவின் மிகவும் புதுமையான இயக்குநர்களில் ஒருவராவும் மூத்த திரைப்பட இயக்குநராகவம் இருந்தவர் சிங்கீதம் சீனிவாச ராவ், 1973-ம் ஆண்டு வெளியான நீதி நிஜயிதே என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதன்பிறகு தமிழில் திக்கற்ற பறவை படத்தை இயக்கிய அவர், கமல்ஹாசன் நடிப்பில் ராஜபார்வை, மும்பை எக்ஸ்பிரஸ், அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன், மகளிர் மட்டும், காதலா காதலா என பல படங்களை இயக்கியுள்ளார்.
‘புஷ்பக விமானா’, ‘ஆதித்யா 369’, ‘மயூரி’ மற்றும் ‘பைரவ தீபம்’ போன்ற மைல்கல் திரைப்படங்களை இயக்கிய சிங்கீதம் சீனிவாச ராவ், கன்னடத்தில் இயக்கிய புஷ்பக விமானா திரைப்படம் மௌனப்படமாக வெளியாகி பெரிய வெற்றி பெற்றது. கடைசியாக சிங் கீதம் என்ற படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் கடந்த ஜூன் மாதம் வெளியானது, நேற்று இரவு ஏற்பட்ட திடீர் மூச்சுத்திணறல் காரணமாக அவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது,
90களிலும் திரைப்படத் தயாரிப்பில் தனக்கிருந்த அசாதாரணமான ஆர்வத்தை வெளிப்படுத்தும் விதமாக, தனது 61வது திரைப்படமான ‘சிங் கீதம்’ மூலம் அவர் மீண்டும் இயக்குநராக ரீ-என்ட்ரி ஆனா சிங்கீதம் சீனிவாச ராவ், 4 மாதங்களிலேயே அவரது மறைவு நிகழ்ந்துள்ளது. தனது முதிர்ந்த வயது மற்றும் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட உடல்நலப் பிரச்சினைகளுக்கு மத்தியிலும், சிங்கீதம் சுமார் 77 நாட்களில் இப்படத்தை நிறைவு செய்தார்.
సింగీతం శ్రీనివాసరావు గారు ఇక లేరన్న వార్త ఎంతో బాధాకరం. ఆదిత్య 369, పుష్పక విమానం, మయూరి… కాలానికి ముందే ఆలోచించి, తరాలు మారినా కొత్తగా అనిపించే సినిమాలు అందించిన దార్శనికుడు. వారి కుటుంబ సభ్యులకు నా ప్రగాఢ సానుభూతి. ఓం శాంతి 🙏— Jr NTR (@tarak9999) October 3, 2026
సింగీతం శ్రీనివాసరావు గారు ఇక లేరన్న వార్త ఎంతో బాధాకరం. ఆదిత్య 369, పుష్పక విమానం, మయూరి… కాలానికి ముందే ఆలోచించి, తరాలు మారినా కొత్తగా అనిపించే సినిమాలు అందించిన దార్శనికుడు. వారి కుటుంబ సభ్యులకు నా ప్రగాఢ సానుభూతి. ఓం శాంతి 🙏
சிங்கீதம் தனது சினிமா வாழ்க்கையை புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் கே.வி.ரெட்டியின் உதவியாளராகத் தொடங்கி, இயக்குநராகத் தன்னை நிலைநிறுத்திக் கொள்வதற்கு முன்பு ‘மாயாபஜார்’ உள்ளிட்ட படங்களில் பணியாற்றினார். இவரது படைப்புகள் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மற்றும் ஆங்கிலச் சினிமா எனப் பல மொழிகளிலும் விரிவடைந்தன.
நகைச்சுவை, நாடகம், அறிவியல் புனைகதை, கற்பனை, அனிமேஷன் மற்றும் சோதனைக் சினிமாக்களுக்கு இடையே இயங்கும் அவரது அரிய துணிச்சலே அவரது வாழ்க்கையின் தனித்துவமாக இருந்தது. தேசிய திரைப்பட விருதுகள், நந்தி விருதுகள், கர்நாடக மாநில திரைப்பட விருதுகள் மற்றும் தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் உட்பட பல கௌரவங்களை அவர் பெற்றுள்ளார்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.